இப்ப யாரு முன்னிலையில் இருந்தாலும் பரவாயில்லை! ஆன திமுக தான் வெற்றி பெறனும்! சமாதியில் சரண்டரான தமிழரசு மற்றும் செல்வி!

By manimegalai a  |  First Published May 23, 2019, 1:20 PM IST

தமிழகம் உட்பட 542 மாநிலங்களில், நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்தது.  தமிழகத்தில் 22 சட்ட மன்ற தொகுதியில், ஒரே கட்டமாக, ஏப்ரல் 18 தேதி தேர்தல் நடைபெற்றது.
 


தமிழகம் உட்பட 542 மாநிலங்களில், நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்தது.  தமிழகத்தில் 22 சட்ட மன்ற தொகுதியில், ஒரே கட்டமாக, ஏப்ரல் 18 தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், பல்வேறு எதிர்பார்புகளுக்கு மத்தியில் , இன்று நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 12 இடங்களிலும், அதிமுக 10 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.

Tap to resize

Latest Videos

திமுக அணி தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என,  திமுக குடும்பத்தைச் சேர்ந்த, மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகன் தமிழரசு , மற்றும் அவருடைய  மகள் செல்வி ஆகியோர், கோபால புறத்தில் இருந்து, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு நடந்தே சென்று, இம்முறை திமுக கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என வேண்டி கொண்டனர். 

இவர்களின் வேண்டுதல் தற்போது நிறைவேறுவது போல் தொடர்ந்து திமுக அணி, தமிழகத்தில் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!