EWS உதவித்தொகைக்காக ரூ.10.5 கோடி நிதி… SC/ST/OBC மாணவர்களுக்கான நிதி என்ன ஆனது? தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி!

Published : May 08, 2022, 08:15 PM ISTUpdated : May 08, 2022, 08:16 PM IST
EWS உதவித்தொகைக்காக ரூ.10.5 கோடி நிதி… SC/ST/OBC மாணவர்களுக்கான நிதி என்ன ஆனது? தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி!

சுருக்கம்

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்களின் கல்வி உதவித்தொகைக்காக பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, சென்னை ஐஐடிக்கு வழங்கிய 10.5 கோடி ரூபாய் நிதியில் SC/ST/OBC மாணவர்களுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படாதது வருத்தமளிப்பதாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். 

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்களின் கல்வி உதவித்தொகைக்காக பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, சென்னை ஐஐடிக்கு வழங்கிய 10.5 கோடி ரூபாய் நிதியில் SC/ST/OBC மாணவர்களுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படாதது வருத்தமளிப்பதாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, சென்னை ஐஐடியுடன் இணைந்து பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்களின் கல்வி உதவித்தொகை நிதியை உருவாக்கியுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் நேற்று உதவித்தொகை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சென்னை ஐஐடியின் டீன் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னூலா, பவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவனத்தின் இயக்குனர் வி.கே.சிங் ஆகியோர்  கையெழுத்திட்டனர். இதன் கீழ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியத்திலிருந்து 10.5 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.

இந்த நிதி, சென்னை ஐஐடியில் பயிலும் தகுதிவாய்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை, கல்வி உதவித் தொகை வாயிலாக செலுத்த உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நிதி பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் என்று கூறப்படுகிறது. 2021-22 நிதியாண்டில் நிறுவனம் பெற்றுள்ள மிக உயர்ந்த பங்களிப்பு இது என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இது பெண் மாணவர்களுக்கு STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) திட்டங்களைத் தொடர உதவும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்களின் கல்வி உதவித்தொகைக்காக பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, சென்னை ஐஐடிக்கு வழங்கிய 10.5 கோடி ரூபாய் நிதியில் SC/ST/OBC மாணவர்களுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படாதது வருத்தமளிப்பதாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஒரு பொதுத் துறை நிறுவனமாக இருக்கும்போது, ஐஐடி மெட்ராஸில் மிகவும் பக்கச்சார்பான நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS) உதவித்தொகைக்கு மட்டும் ரூ.10.5 கோடி ஒதுக்கப்பட்டதா? SC/ST/OBC மாணவர்களுக்கான உதவித்தொகை நிதி என்ன ஆனது? இந்தத் தொகையானது ஐஐடி மெட்ராஸ் தனது கடந்த நிதியாண்டில் உதவித்தொகைக்காகப் பெற்ற மிகப்பெரிய சமூக நடவடிக்கைகளுக்கான (CSR) நிதியாகவும் உள்ளது. ஆனால் SC/ST/OBC மாணவர்களுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படாதது வருத்தமளிக்கிறது. மின்வாரியத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட கார்ப்பரேஷனின் இந்த அநியாய மற்றும் ஜாதிவெறி நிதி ஒதுக்கீட்டை மின்துறை உடனடியாக கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!