இந்த தடவை நாடு முழுவதும் நீட் இப்படிதான்...! மத்தியில சொல்லிட்டாங்களாம்...!

 
Published : Jan 22, 2018, 05:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
இந்த தடவை நாடு முழுவதும் நீட் இப்படிதான்...! மத்தியில சொல்லிட்டாங்களாம்...!

சுருக்கம்

thamilisai says about neet exam

நீட் தேர்வு வினாக்கள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் என பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசையிடம், மத்திய கல்வி அமைச்சர் ஜவடேகர் உறுதியளித்துள்ளார்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் மூலமாக மருத்துவ இடங்களை நிரப்பிவந்த தமிழகம், நீட் நுழைவுத் தேர்வை கடுமையாக எதிர்த்தது. ஆனால், நீட் தேர்வில் உறுதியாக இருந்த மத்திய அரசு, தமிழகத்திற்கு கடந்த ஆண்டு விலக்கு அளிக்கவில்லை.

அதனால், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில் தோல்வியுற்றதால், பல மாணவர்கள் மருத்துவ இடம் கிடைக்காமல் பரிதவித்தனர். இதற்கு காரணம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து நீட் தேர்வில் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டதுதான். சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு அது பெரும் சவாலாக இருந்தது.

நீட் தேர்வை எதிர்கொள்ள வைக்க தமிழக கல்வித்துறை சார்பில், அரசு பயிற்சி மையங்கள், புதிய பாடத்திட்டம், 11ம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வரும் மே மாதம் 6ம் தேதி இந்தாண்டுக்கான நீட் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள  பாஜக மாநில தலைவர் தமிழிசை, நீட் தேர்வு வினாக்கள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் என தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் ஒரே மாதிரியாக இருக்கும் எனவும் CBSE மற்றும் மாநில பாடத்திட்டங்களை இணைத்து அதிலிருந்து வினாத் தாள் தயாரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!