
தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றவர்கள் கைது
வேல்முருகன் தலைமையில் தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேரணியாக வந்தவர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடு என்ற வாசகம் அடங்கிய பாதாகைகளை ஏந்திய வண்ணம், ஆர்ப்பாட்ட குரல்களை எழுப்பிய வண்ணம் சென்றவர்களை கைது செய்தது போலிஸ்.