தலைமை செயலகத்தை முற்றுகை பேரணி... வேலுமுருகன், திருமுருகன் காந்தி கைது

Asianet News Tamil  
Published : May 24, 2018, 05:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
தலைமை செயலகத்தை முற்றுகை பேரணி... வேலுமுருகன், திருமுருகன் காந்தி கைது

சுருக்கம்

huge protest lead tamil groups against tn gov chennai

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட கட்சியினர் போலீசாரின் தடுப்பை மீறி தலைமை செயலகம் நோக்கி சென்றபோது
அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராடிய மக்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
60-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. தற்போது சென்னை மெரினா கடற்கரை சாலையில் தமிழ் அமைப்பகள்
போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி, மே 17, திராவிட விடுதலை
கழகத்தினர், திருமுருகன் காந்தி, வேல்முருகன் ஆகியோர் இந்த பேரணியை நடத்தி வருகின்றனர்.

இந்த பேரணியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். பேரணியை தடுக்க அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 3
இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனாலும், போராட்டக்காரர்கள் தடுப்புகளைத் தாண்டி சென்றுள்ளனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை போராட்டக்காரர்கள் வந்துள்ளனர். இந்த நிலையில்,
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையையும் தாண்டி தலைமை செயலகத்தை நோக்கி சென்ற போராட்டக்காரர்கள் சென்றனர். இதையடுத்து, அவர்களை போலீசார்
கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுக அரசில் 4 முதல்வர்கள்..! தேர்​தலின்​போது அமைச்​சர்​களுக்கு நேரப்போகும் கதி..! பகீர் கிளப்பும் இபிஎஸ்..!
பாஜகவுடன் நேருக்கு நேர் மோதல்.. விஜய் களமிறங்கும் தொகுதி இதுதான்... தவெகவின் ‘வி’ சென்டிமெண்ட்..!