"ஜெ. இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?" - எடப்பாடிக்கு சாட்டையடி கொடுத்த தமீமுன் அன்சாரி...!!!

 
Published : Jun 20, 2017, 12:27 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
"ஜெ. இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?" - எடப்பாடிக்கு சாட்டையடி கொடுத்த தமீமுன் அன்சாரி...!!!

சுருக்கம்

thameemun ansari pressmeet about beef issue

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் மாற்றைச்சி தடையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றபட்டிருக்கும் எனவும் தற்போது முட்டலாமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் தங்களுக்கு திருப்தி இல்லை எனவும் மனித நேய ஜனநாயக கட்சியின் தமீமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ வாங்கவோ கூடாது சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

கேரளா, மேகாலயா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டத்தை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதைதொடர்ந்து மாட்டிறைச்சி தடை குறித்து மத்திய அரசு பிறப்பித்த ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தனிநபர் தீர்மானம் கொண்டுவந்தனர். அப்போது அதிமுகவின் ஆதரவு எம்.எல்.ஏக்களான தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோரும் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தனிநபர் தீர்மானம் கொண்டுவந்தனர்.

அதற்கு தமிழக சட்டப்பேரவை மறுப்பு தெரிவிக்கவே ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூன்று பேரும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மனித நேய ஜனநாயக கட்சியின் தமீமுன் அன்சாரி கேரளா, மேகாலயா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக அம்மாநில முதலமைச்சர்களே அவசர சட்டம் பிறபித்து தீர்மானத்தை நிறைவேற்றியாதவும், கோவாவில் பாஜக ஆதரவு கட்சியே எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்டசபையில் மாட்டிறைச்சி தடை குறித்து முதலமைச்சர் எடப்பாடி அளித்த பதிலில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும், ஜெயலலிதா இருந்திருந்தால் நங்கள் கொடுத்த தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பார் எனவும் குறிபிட்டார்.

மாட்டிறைச்சிக்கு தடை கோருவதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் எனவும், ஏழை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

PREV
click me!

Recommended Stories

பிரதமர் மோடி சர்ச்சுக்கு போய்ட்டாரு.. ஸ்டாலின் எப்போ இந்து கோயிலுக்கு போவாரு? தமிழிசை கேள்வி!
விஜய் வாக்குகளால் கதிகலங்கும் திமுக..! கடைசியில் கனிமொழியை நம்பி இருக்கும் மு.க.ஸ்டாலின்..!