தமிழ்நாட்டில் கனமழை.. வெளிநாட்டில் ஸ்டாலின்..! இதுதான் மக்கள் மீதான அக்கறை..! விளாசி தள்ளிய தம்பிதுரை..!

Asianet News Tamil  
Published : Nov 04, 2017, 01:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
தமிழ்நாட்டில் கனமழை.. வெளிநாட்டில் ஸ்டாலின்..! இதுதான் மக்கள் மீதான அக்கறை..! விளாசி தள்ளிய தம்பிதுரை..!

சுருக்கம்

thambudhurai criticizes mk stalin

பருவமழை பாதிப்பை எதிர்கொள்ள அரசு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என குறைகூறிய ஸ்டாலின், உலக பயணம் சென்றுள்ளா; இதுதான் மக்கள் மீதான அவரது அக்கறை என ஸ்டாலினை தம்பிதுரை விமர்சித்துள்ளார்.

கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அரசு சார்பில் வெள்ளத் தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்போதிலும், இன்னும் சிறப்பாக செயல்பட அரசு தவறிவிட்டது என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துவந்தார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 36 வது ஷார்ஜா சர்வதேசப் புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார்.

தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார்.

கரூரில் பேசிய தம்பிதுரை, மழை பாதிப்பு தொடர்பான அரசின் நடவடிக்கைகளை குறைகூறிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதுதான் மக்களின் மீதான ஸ்டாலினின் அக்கறை என விமர்சித்தார். மேலும் பருவமழை பாதிப்பை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு வருவதாகவும் தம்பிதுரை தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

Next CM: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..! 1% வாக்கு வித்தியாசத்தில் உச்சானி கொம்பில் திமுக!
TN CM Vjiay: அடுத்த முதல்வர் விஜய்.! அடித்து சொல்லும் ஜோதிடம்.! உடைத்து பேசும் ஜோதிடர்கள்.!