
அரிதார நாயகர்களெல்லாம் யதார்த்த போராளிகளின் பார்வைக்கும், கைகோர்ப்புக்கும் அப்பாற்பட்டவர்கள் என்பதை தகர்த்தெறிய துவங்கியிருக்கிறார் கமல்ஹாசன். அரசியல் பாதையின் ஆரம்ப நிலையிலிருக்கும் கமல் ‘ட்விட்டர் அரசியல்வாதி’ எனும் விமர்சன வியாக்யானத்தை உடைத்தெறிந்து கொசஸ்தலை ஆற்றில் முதல் களம் கண்டார். இதோ இன்று உணவு உற்பத்திக்கும் விவசாயிகளின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் சிறப்பு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகியிருக்கிறார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முத்தமிழ் அரங்கத்தில் நடந்திருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் கமல்.
அடித்துப் பெய்யும் அடைமழையில் ஆழ்வார்பேட்டை ஆண்டவர் அங்கே வருவாரா மாட்டாரா? என்று விவசாயிகள் நகம் கடித்த நிலையில் பளீர் வெள்ளை உடையில் பாந்தமாக வந்து கலந்திருக்கிறார். அரசியல் பாதை என்றான பின் சவால்களை தேடிச்சென்று சந்தித்தால்தானே சாதிக்க முடியும். அதிலும் ரிஸ்க் எடுப்பதை துணிந்து செய்யும் நபராயிற்றே!
கமலுக்கு முன்பாக உளவுத்துறை போலீஸார் சிலர் அங்கே வேஷ்டி கட்டிக் கொண்டு விவசாயிகள் போல் ஆஜராயிருந்தார்கள், இவர்களை பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்திருக்கின்றனர் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள்.
சிறப்பு விருந்தினரான உலகநாயகன் இந்த கூட்டத்தில் ஆற்றிய சிறப்புரையின் ஹைலைட்டுகள் அடுத்தடுத்த பதிவுகளில் தர உள்ளோம்.
இப்போதைக்கு இண்டர்வெல்! மழைக்கு இதமாய் தேநீர் அருந்திவிட்டு வாருங்கள்.
வீ ஆர் வெயிட்டிங்!