தமிழக ஆளுநரை இன்று சந்திக்கிறார் தம்பிதுரை… ஸ்டாலின் கம்ப்ளைண்ட்டுக்கு  கவுன்ட்டர் கொடுப்பாரா ?

 
Published : Jun 18, 2017, 08:02 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
தமிழக ஆளுநரை இன்று சந்திக்கிறார் தம்பிதுரை… ஸ்டாலின் கம்ப்ளைண்ட்டுக்கு  கவுன்ட்டர் கொடுப்பாரா ?

சுருக்கம்

thambidurai wil meet governer

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று காலை 11 மணி அளவில் சந்திக்க உள்ளார். எம்எல்ஏக்கள் பண பேர விவகாரம் குறித்து ஸ்டாலின் நேற்று ஆளுநரை சந்தித்து முறையிட்ட நிலையில்,  தம்பிதுரை இன்று ஆளுநரை சந்திக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டப் பேரவையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு பணம் மற்றும் தங்கம் கொடுக்கப்பட்டதாக அக்கட்சியின் எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோ அண்மையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டது.

இதையடுத்து அதிமுக அரசை கலைக்க வேண்டும் தமிழக எதிர்கட்சிகள் வறியுறுத்தி வருகின்றன. இப்பிரச்சனை குறித்து சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என எதிர்கட்சிக் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மு,க,ஸ்டாலின் தலைமையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவை திமுகவினர் நேற்று சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில் கவர்னர் வித்யா சாகர் ராவை இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சந்திக்க உள்ளார். நேற்றுதான் திமுக சார்பில் ஆளுநர் சந்திப்பு நடைபெற்ற நிலையில், இன்று அவரை தம்பிதுரை சந்திக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு 23 தொகுதிகளா? ஓபிஎஸ், டிடிவியை ஏற்றுக்கொண்டாரா இபிஎஸ்? நயினார் சொன்ன முக்கிய அப்டேட்!
திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!