
எங்களது ஒரே குறிக்கோள் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியளாரிடம் கூறினார்.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, டெல்லியில் செய்தியாளரிடம் கூறியதாவது:-
யார் எத்தனை குழுவாக இருந்தாலும், அனைவரும் அதிமுகவினர்தான். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம். ஆனால், அனைவருமே அதிமுகவுக்காகவே செயல்படுகிறோம்.
கட்சியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் என அனைவரும் டிடிவி.தினகரனையும், எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் தாராளமாக சந்திக்கலாம். இதில் எந்த பாகுபாடும் கிடையாது.
எங்களது ஒரே குறிக்கோள் ஜெயலலிதாவின் ஆட்சி நடக்க வேண்டும். அவரது பணி தொடர வேண்டும். மக்களுக்கான நலத் திட்டங்கள் முறையாக போய் சேர வேண்டும். அதை செயல்படுத்தவே நாங்கள் இருக்கிறோம்.
ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் எங்களுடன் இணைந்தால், அவருக்கு அரசு பதவியோ, கட்சி பதவியோ வழங்குவதற்கு நாங்கள் முடிவு எடுக்க முடியாது. அது எங்களின் முடிவு மட்டும் இல்லை. ஒரு கோடியே 50 லட்சம் தொண்டர்களும் சம்மதிக்க வேண்டும்.
தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இது அப்படியே தொடரும். கட்சி பதவி யாருக்கு கொடுப்பது என்பதும், தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.