திருவாரூர் தேர்தலை நிறுத்து..! அதிரடி காட்டும் அதிமுக தம்பிதுரை..!!

By Selvanayagam PFirst Published Jan 2, 2019, 9:52 AM IST
Highlights

கஜா புயல் நிவாரணப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் திருவாரூர் தொகுதிக்க இடைத் தேர்தல் நடத்தக் கூடாது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை போர்க் கொடி உயர்த்தியுள்ளார்.

கஜா புயல் திருவாரூர், நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. இதையடுத்து அங்கு தற்போது நிவாரண் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் தான் மத்திய அரசு கஜா நிவாரண நிதியை அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியான கையோடு உடனடியாக தேர்தல்  ஆணையம் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது.

இதையடுத்து சுறுசுறுப்படைந்த கட்சிகள்  தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. அதிமுக, திமுக போன்ற கட்சிகள் தற்போது போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்தது விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன.

இந்நிலையில் தான் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை திடீரென அங்கு தேர்தல் நடத்தக் கூடாது என போர்கொடி உயர்த்தியுள்ளார். இதற்கு அவர் சொல்லும் காரணம் என்ன தெரியுமா ? கஜா புயல் தான். தற்போது அங்கு நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத் தேர்தல் அறிவிப்பால், அந்தப்பணிகள் பாதிக்கப்படும் என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் நிவாரணப் பொருட்களை வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அது மட்டும்மல்லாமல் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசு அறிவித்த பொங்கல்  பரிசுகள் வழங்கப் உள்ளன. இந்நிலையில் தேர்தல் நடத்தக் கூடாது என்றும், உடனடியாக அது ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தம்பிதுரை தெரிவித்துள்ளார்

click me!