நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு.. வசமாக சிக்கிய அதிமுக மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை..!

Published : Aug 04, 2021, 04:04 PM IST
நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு.. வசமாக சிக்கிய அதிமுக மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை..!

சுருக்கம்

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்டு, அருகிலுள்ள அரசு பள்ளிக்கு வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த கோனம்பேடு கிராம பொது நல சங்கத்தின் தலைவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் கல்வித்துறை  அமைச்சரும், மக்களவை முன்னாள்  துணை சபாநாயகருமான தம்பிதுரையின் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம், அருகில் உள்ள கிராம நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மின்சார துணை நிலையம் மற்றும் தனியார் பாதை , மாணவ மாணவிகள் தங்கும் விடுதி கட்டி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், அருகில் உள்ள  ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்த நிலங்களை அப்பகுதியில் உள்ள பள்ளியின் வசதிக்காக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி தமிழ்ச்செல்வி அமர்வு, இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோர் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!