முன்னாள் அமைச்சருக்கு 6 வது திருமணமா.??? மூன்றாவது மனைவி போலீசில் கதறல்..

By Ezhilarasan BabuFirst Published Aug 4, 2021, 3:24 PM IST
Highlights

மத்திய அரசு முத்தலாக் முறையை ரத்து செய்த பின்னரும், அவர் தன்னை முத்தலாக் முறையில் விவாகரத்து செய்ததாகவும், அதுகுறித்த தகவலை மார்ச் 23 அன்று அவர் தனக்கு தெரிவித்ததாகவும் நக்மா அந்த புகாரில் கூறியுள்ளார். 

ஆறாவது திருமணம் செய்ய முயன்ற அமைச்சருக்கு எதிராக அவரது மூன்றாவது மனைவி புகார் கொடுத்ததால் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வரம்புக்கு மீறி சட்டவிரோதமாக திருமண நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமைச்சர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எத்தனையோ துறைகளில் ஆணுக்கு நிகராக பெண்கள் முத்திரை பதித்து வருகின்றனர், ஆனாலும்கூட பெண்கள் இன்னும்கூட போகப் பொருளாகவே பாவிக்கப்படுகின்றனர். இந்த வரிசையில் உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஐந்து திருமணங்களை செய்துள்ள நிலையில், ஆறாவதாக திருமணம் செய்ய முயற்சித்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் சமாஜ்வாடி  கட்சியைச் சேர்ந்தவர் சவுத்ரி பஷீர், மாயாவது ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர் ஆவார். பின்னர் அவர் சமாஜ்வாடி கட்சியின் இருந்து வருகிறார். ஏற்கனவே பஷீர் ஐந்து திருமணங்கள் செய்துள்ள நிலையில், ஆறாவதாக திருமணத்திற்கு தயாராகி வருவதாக போலீசாரிடம் அவரது மூன்றாவது மனைவி புகார் கொடுத்தார்.

உடனே களத்தில் இறங்கிய போலீசார் பஷீர் ஆறாவதாக செய்யவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.மேலும் அவரது மூன்றாவது மனைவி நக்மா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-  நான் கடந்த 2012ஆம் ஆண்டு பஷீரை திருமணம் செய்து கொண்டேன், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பது தெரிந்தும் அவரை மறுமடம் செய்து கொண்டேன். ஆரம்பத்தில் இனிமையாகவே வாழ்க்கை சென்றது. நாளடைவில் பஷீர் தனது உண்மை முகத்தை காட்ட தொடங்கினார். என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தினார். அவர் எப்போதும் பெண்கள் வட்டத்திலேயே இருக்க வேண்டுமென்று விரும்பக் கூடியவர். அவருடன் வாழ்ந்த காலத்தில் நான் மிகவும் கொடுமைப் படுத்தப் பட்டேன். மிகுந்த சித்திரவதையை அனுபவித்தேன் என நக்மா தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.

மத்திய அரசு முத்தலாக் முறையை ரத்து செய்த பின்னரும், அவர் தன்னை முத்தலாக் முறையில் விவாகரத்து செய்ததாகவும், அதுகுறித்த தகவலை மார்ச் 23 அன்று அவர் தனக்கு தெரிவித்ததாகவும் நக்மா அந்த புகாரில் கூறியுள்ளார். அடுத்தடுத்து பெண்களை திருமணம் செய்து கொள்ள அவர் முயற்சித்து வருவதால் அவரை தடுத்து நிறுத்த வேண்டும் என போலீசிடம் நக்மா வலியுறுத்தியுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அவரது ஆறாவது திருமணத்தை தடுத்து நிறுத்தியதுடன்,  முத்தலாக் திருமண மோசடி விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டில் சவுத்ரி பஷீர், 23 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தார் என்பது குறிப்பிடதக்கது.
 

click me!