எடப்பாடி அரசாங்கம் சிறப்பா நடக்குது... மக்கள் எங்க பக்கம் தான் இருக்காங்க! கெத்து காட்டும் தம்பிதுரை

Published : Apr 21, 2019, 12:32 PM IST
எடப்பாடி அரசாங்கம் சிறப்பா நடக்குது... மக்கள் எங்க பக்கம் தான் இருக்காங்க! கெத்து காட்டும் தம்பிதுரை

சுருக்கம்

எடப்பாடி அரசாங்கம் சிறப்பான பல திட்டங்களை செய்துள்ளது. மக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.  

எடப்பாடி அரசாங்கம் சிறப்பான பல திட்டங்களை செய்துள்ளது. மக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக இருக்கும் திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இடைத் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்துள்ள திமுக, தேர்தல் பணிகளையும் துவங்கிவிட்டது. அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே தனது பிரச்சாரத்தை துவக்கிவிட்டார்.

இந்த நிலையில் அரவக்குறிச்சி இடைத் தேர்தல் தொடர்பாக அதிமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் கரூரில் நடைபெற்றது. அதில் அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆகியோர் கலந்துகொண்டு எவ்வாறு களப்பணியாற்ற வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். யார் எங்கே இருக்கிறார்கள், எதற்காக நிறம் மாறுகிறார்கள், அவர்களுக்கு நாம் வாய்ப்பு தர வேண்டுமா என்பதை மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். அதிமுக என்பது நிலையான இயக்கம். ஜெயலலிதா உருவாக்கித் தந்த ஆட்சி எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலில் நடந்துகொண்டிருக்கிறது. 

எடப்பாடி அரசாங்கம் சிறப்பான பல திட்டங்களை செய்துள்ளது. இந்தத் தேர்தலில் எந்தவித இடர்பாடும் இல்லாமல் வாக்குக் கேட்டவன் நான். மக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். எனவே அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!
பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!