கரூரில் தளபதி கிச்சன் திட்டம் அதிரடியாகத் தொடக்கம்... ஆட்டத்தை தொடங்கிய செந்தில்பாலாஜி..!

By Asianet TamilFirst Published May 13, 2021, 8:51 PM IST
Highlights

கரூரில் ஏழை எளிய மக்களுக்கு 3 வேளையும் உணவு வழங்க ‘தளபதி கிச்சன்’ என்ற திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
 

சென்னையில் ராஜீவ்  காந்தி அரசு மருத்துவமனையில் 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சில தினங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். இந்நிலையில் கரூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ‘தளபதி கிச்சன்’ என்ற திட்டத்தை, அமைச்சரான பிறகு கரூருக்கு முதன்முறையாக திரும்பிய செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள், ஏழை, எளிய மக்கள், வயதானவர்கள், உணவுக்கு வழியில்லாதவர்களுக்காக கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் தளபதி கிச்சன் உருவாக்கப்பட்டுள்ளது.
காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் இங்கு தங்கு தடையின்றி, உணவுப் பொட்டலங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்களுக்கு உணவில்லை என்று நினைப்பவர்கள் இங்கு வந்து உணவுப் பொட்டலங்களைப் பெற்றுச் செல்லலாம். கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மூன்று பிரிவுகளாக தொற்றை தரம் பிரித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்று செந்தில்பாலாஜி தெரிவித்தார். 

click me!