ஒவ்வொருவரின் உயிரும் முக்கியம்.. யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்.. துணை சபாநாயகர் பிச்சாண்டி வேண்டுகோள்..!

By vinoth kumarFirst Published May 13, 2021, 6:32 PM IST
Highlights

கொரோனா காலத்தில் யாரும் என்னை சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும் என்று துணை சபாநாயகர் பிச்சாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா காலத்தில் யாரும் என்னை சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும் என்று துணை சபாநாயகர் பிச்சாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை துணைத் தலைவரும், கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏவுமான கு.பிச்சாண்டி விடுத்துள்ள அறிக்கையில்;- இந்த கொரோனா பேரிடர் காலத்தில் நாம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. அரசு அறிவித்திருக்கும் ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டுக்குள் இருந்து கொரோனா தொற்று பரவலைத் தடுக்க உதவிட வேண்டும். 

இந்த நேரத்தில் யாரும் என்னை சந்திக்க வருவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுகிறேன். இந்த பேரிடர் காலம் முடிந்தவுடன் நானே உங்களை நேரில் வந்து சந்தித்து உங்களுடைய வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்கிறேன். இந்த இரண்டாம் அலையில் கணிசமான உயிர்ச்சேதம் ஏற்படுவதை நாம் அனைவரும் அறிவோம். உங்கள் ஒவ்வொருவரின் உயிரும் உங்கள் குடும்பத்துக்கு மிக முக்கியமானது. இந்த உணர்வை மனதில் நிறுத்தி மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி உங்களை அன்போடு வேண்டுகிறேன். 

அன்பான வேண்டுகோள்.! pic.twitter.com/bZax6VS9NU

— Pitchandi K (@PitchandiK)

 

எப்போதும் முகக்கவசம் அணியுங்கள், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளுங்கள் எந்த காரணம் முன்னிட்டும் கூட்டமான இடங்களுக்கு செல்லாதீர்கள் என கு.பிச்சாண்டி அறிவுறுத்தியுள்ளார். 

click me!