அந்த ரெண்டு எம்.பி., சீட்... குஸ்தி போடும் அதிமுக நிர்வாகிகள்..!

By Thiraviaraj RMFirst Published May 13, 2021, 6:17 PM IST
Highlights

ஜெயலலிதா இருந்தபோது நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, முத்துக்கருப்பன், மனோஜ்பாண்டியன் என நான்கு பேர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக இருந்தனர்.

அதிமுகவில் புதிதாக தேர்வான 2 எம்எல்ஏக்களும் தங்களது ராஜ்ய சபா எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டனர். இந்த காலியிடங்களை பிடிக்க அதிமுகவினர் குஸ்தி போட்டு வருகின்றனர். ராஜினாமா செய்த வைத்தியலிங்கத்தின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு மட்டுமே இருந்தாலும், கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் உள்ளதாம். இதனால் முனுசாமியின் பதவிக்கு தான் குடுமிப்பிடியாம்.

ஜெயலலிதா இருந்தபோது நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, முத்துக்கருப்பன், மனோஜ்பாண்டியன் என நான்கு பேர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக இருந்தனர். இதில் மனோஜ்பாண்டியன் தற்போது எம்எல்ஏவாகி விட்டார், சசிகலா புஷ்பா அதிமுகவில் இருந்து விலகி பாஜவில் இணைந்து விட்டார் என்பதால், முன்னாள் பெண் எம்பி தான் 2வது முறையாக ராஜ்ய சபா எம்பி பதவியை பிடிக்க காய் நகர்த்துகிறாராம்.

சட்டசபை தேர்தலில் தனக்கு வாய்ப்பு கேட்டும் அளிக்கப்படாத நிலையில் இந்த இடத்தையாவது தாருங்கள் என்கிறாராம். முடிவுகள் தலைமையின் கையில் என்பதால் காத்திருக்கிறார் என்கிறார்கள்.

click me!