என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்பந்தப்படுத்தினால்.... தமிழிசைக்கு பதிலடி கொடுத்த தல...

By sathish kFirst Published Jan 21, 2019, 7:32 PM IST
Highlights

அஜித்திற்கு இருக்கும்  ரசிகர்கள் பலத்தை பிஜேபிக்கு பயன்படுத்த முயன்ற தமிழிசைக்கு சூட்டோடு சூடாக நெத்தியடி பதிலடி கொடுத்துள்ளார் தல அஜித்.

திருப்பூரில் 100க்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையும் விழாவில் பேசிய தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை  திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித் என ஐஸ் வைத்த தமிழிசை, தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள் தாறுமாறாக ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார்.

அதோடு விட்டாரா என்ன? பிஜேபியில் இணைந்த அஜித் ரசிகர்கள், இனி மோடியின் திட்டங்களை  மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் தொண்டர்களாக மாறுவார்கள் என அஜித்தை அறிக்கை விடும் அளவிற்கு புகழ்ந்து தள்ளினார்.

அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ, என் ரசிகர் இயக்கங்கள் மீதோ அரசியல் சாயம் பூசிவிடக் கூடாது என்பதற்காகவே சில வருடங்களுக்கு முன் ரசிகர் மன்றத்தைக் கலைத்தேன், "அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு. அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என்மேல் திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையே தான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எந்தவொரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் சற்றும் விரும்பவில்லை, என்றார்.

தமிழிசைக்கு நேரடியாகவே பதிலடிகொடுப்பதைப்போலவே, நான் ரசிகர் மன்ற கலைத்த இந்த முடிவுக்குப் பிறகும் கூட, சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்பந்தப்படுத்தி சில செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதோ என்ற ஐயப்பாட்டை பொதுமக்களிடையே விதைக்கும் என தமிழிசைக்கு நேரடி பதிலடி கொடுக்கும் விதமாக அறிக்கையில் சொல்லியுள்ளார் தல.

click me!