திமுக கொண்டாட்டத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர்.. மீண்டும் பணியில் சேர்ப்பு.

By Ezhilarasan BabuFirst Published May 6, 2021, 2:19 PM IST
Highlights

தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கைக்கு உள்ளான தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் காவல் ஆய்வாளர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.   

தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கைக்கு உள்ளான தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் காவல் ஆய்வாளர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.  

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான முடிவில் 159 தொகுதிகளை கைப்பற்றி திமுக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. 

முன்னதாக  கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை தீவிரமாக தாக்கி வரும் நிலையில்  தேர்தல் வெற்றியை கொண்டாட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது, ஆனால் தேர்தலில் திமுக 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றிபெற்றதையடுத்து திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் திரண்டு வெற்றியை கொண்டாடினர். அண்ணா அறிவாலயம் தேனாம்பேட்டை காவல்  சரகத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாததாலும், அண்ணா அறிவாலயத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததாலும், அங்கு திரண்ட கூட்டத்தை அப்புறப்படுத்தாததாலும், தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளியை தேர்தல் ஆணையம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தது. 

அதைத்தொடர்ந்து அண்ணா அறிவாலய ஊழியர்கள் அங்கு திரண்ட தொண்டர்களை அப்புறப்படுத்தினர். இந்நிலையில் மீண்டும் சென்னை காவல் ஆணையர் வழிகாட்டுதலின் பேரில், காவல் இணை ஆணையர் லக்‌ஷ்மி ஆய்வாளர் முரளியை மீண்டும் அதே காவல் நிலையத்தில் பணியமர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.   

 

click me!