வரும் 26 ஆம் தேதி நிகழப்போகும் தரமான சம்பவம். அலர்ட்டா இருக்க சொல்லியும் கேட்காத கேரளா.. வானிலை மையம் பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2021, 4:42 PM IST
Highlights

வரும் 23 ஆம் தேதி இந்திய நிலப்பரப்பில் இருந்து தென்மேற்கு பருவமழை  வெளியேறும் என்றும், பெரும்பாலான மாநிலங்களில் இருந்து 26 ஆம் தேதி அது மற்றிலும் வெளியேற்றும் என்றும், அதே தினத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்

.

வரும் 23 ஆம் தேதி இந்திய நிலப்பரப்பில் இருந்து தென்மேற்கு பருவமழை  வெளியேறும் என்றும், பெரும்பாலான மாநிலங்களில் இருந்து 26 ஆம் தேதி அது மற்றிலும் வெளியேற்றும் என்றும், அதே தினத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக பெய்தது. 

ஆனால் இந்த ஆண்டு அது இயல்பான அளவில் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக அதிகமாக பெய்துள்ளது, இயல்பாக வருடத்திற்கு ஆறு புயல்கள் வரை தாக்கக்கூடும் வடகிழக்கு பருவமழை காலத்திலும் இரண்டு புயல்கள் வரை உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் அவை இரண்டும் தமிழ்நாட்டில்தான் கரையை கடக்கும் என உறுதியாகக் கூற முடியாது என புவியரசன் கூறினார். அதேபோல் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளாவில் மழைக்கு நான்கு நாட்களுக்கு முன்பாகவே, ஆரஞ்சு அல்ர்ட் வழங்கி விட்டோம். 

தென்மேற்கு பருவமழை முடிய கூடிய காலம் என்பதால், அதிக மழை பெய்யுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனாலும் கடந்த 16ஆம் தேதி காலை கேரளாவுக்கு சென்னை வானிலை ஆய்வு மையத்திலிருந்து ரெட் அலர்ட் வழங்கிவிட்டோம். நமது தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்தர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அதை தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை தொடர்பாக தமிழக அரசிற்கு தினமும் வானிலை அறிவிப்பு கொடுத்து கொண்டிருக்கிறோம். தேவைக்கேற்ப வானிலை நிலவரத்திற்கேற்ப்ப சிறப்பு அறிக்கைகள் வெளியிடப்படும் என அவர் கூறினார்.

 

click me!