ஆத்திரமூட்டிய எடப்பாடி, சி.வி.சண்முகம் பேச்சு... ரூட்டை மாற்றும் சசிகலா..!

By Thiraviaraj RMFirst Published Jul 2, 2021, 5:15 PM IST
Highlights

போன் போட்டு நலம் விசாரிப்பு கை கொடுக்கவில்லை என்று சசிகலா தரப்பு புலம்பல், வேறு ரூட்டுக்கு போக யோசிக்க வைத்துள்ளதாக கூறுகிறார்கள்.
 

போன் போட்டு நலம் விசாரிப்பு கை கொடுக்கவில்லை என்று சசிகலா தரப்பு புலம்பல், வேறு ரூட்டுக்கு போக யோசிக்க வைத்துள்ளதாக கூறுகிறார்கள்.

தென் மாவட்டங்களை குறி வைத்து சசிகலா அதிமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசி வரும் நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அவருக்கு எதிராக அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி பதிலடி கொடுத்தார்கள். இந்நிலையில் சசிகலாவை தொடர்பு கொண்டு பேசியவர்களில் சிலர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக என்ற பெயரில் அவருக்கு ஆதரவாக கூட்டம் போட்டு, பொதுச் செயலாளராக அவரையே தேர்வு செய்ய வேண்டும் என தீர்மானமும் நிறைவேற்றி ராயப்பேட்டை தலைமைக்கு ஷாக் கொடுத்தார்கள்.

 

அதிமுகவுக்கு போட்டியாக சசிகலா ஆதரவாளர்கள் கூட்டம் நடந்த பிறகு மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகளிடம் பெரிதாக எந்த ரியாக்‌ஷனும் வரவில்லை.  நம்ம கணக்கே தப்பாக போச்சே என்று சசிகலா தரப்பு டென்ஷனில் இருக்கிறது. ஏற்கெனவே தென் மாவட்டங்களில் ஸ்ட்ராங்காக இருந்த அமமுக கூடாராம் கலகலத்து தற்போது காலியாகி விட்ட நிலையில் உள்ளது. இதை சில விசுவாசிகள் சசிகலாவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். 

எத்தனை நாள் தான் இந்த தொலைபேசி பேச்சு... இனி இந்த பார்முலா சரிப்பட்டு வராது என்ற முடிவுக்கு வந்துள்ளார் சசிகலா. விரைவில் ஒரு நல்ல நாளாக பார்த்து நேரடியாக களத்தில் இறங்க முடிவு செய்து இருக்கிறார். கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட, ஒதுங்கி உள்ளவர்களை வைத்து ஒரு மீட்டிங் போட்டால்தான் சரி வரும் என நினைக்கிறார். காரணம் எடப்பாடி பழனிசாமியும், சி.வி.சண்முகமும் பேசிய பேச்சை கேட்டு நேரடி களம் தான் கை கொடுக்கும் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார். 

click me!