கூடங்குளம் அணுமின்நிலையத்தில் அடுத்த பதட்டம்.! தொழிலாளர்கள் கலவரம் போலீசார் மருத்துவமனையில் அனுமதி.!!

By Thiraviaraj RMFirst Published May 9, 2020, 7:41 PM IST
Highlights

கூடங்குளத்தில் அனு உலையில் வேலை செய்து வரும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் வெளியில் இருந்த தொழிலாளர்களையும் அங்கே தங்க வைத்து கொடுமை படுத்துவதாகவும், ஊருக்கு போக வேண்டும் என்று அங்குள்ள போலீசாரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள், போலீசாரை தாக்கியதில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கூடங்குளத்தில் அடுத்த பிரச்சனை அனலாய் பரந்து கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 3ம் கட்ட  ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு போக ரயில்கள் ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறது அந்தந்த மாநில அரசு. கூடங்குளத்தில் அனு உலையில் வேலை செய்து வரும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் வெளியில் இருந்த தொழிலாளர்களையும் அங்கே தங்க வைத்து கொடுமை படுத்துவதாகவும், ஊருக்கு போக வேண்டும் என்று அங்குள்ள போலீசாரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள், போலீசாரை தாக்கியதில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்  அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமாரன்.

இதுகுறித்து மாவட்ட எஸ்பி கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில்..."

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அடுத்தடுத்து அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் ஏழைத் தொழிலாளர்கள்  அங்கே தங்கள் விருப்பத்துக்கு எதிராக அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் கோபத்தோடும், மனக்குமுறலோடும் போதிய உணவு, தண்ணீர், சம்பளம், தங்குமிடம், கழிப்பறை வசதிகள் ஏதுமின்றி துன்புற்றுக்கொண்டிருக்கின்றனர்.

ஆயிரக்கணக்கில் இவர்கள் வளாகத்துக்குள்ளேயே வசிக்கும்போது, கலவரம் செய்யும்போது, அங்கே இயங்கிக்கொண்டிருக்கும் முதல் இரண்டு அணுஉலைகளை சில நூறு சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மட்டும் பாதுகாத்துக்கொள்வார்களா? என்கிற ஐயம் எழுகிறது. இது வெறும் உள்ளூர் சட்ட ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, பல கோடி மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை என்பது உங்கள் இருவருக்கும் நிச்சயமாகப் புரிந்திருக்கும்.
அணுமின் நிலையங்களுக்கு அருகே 1.6. கிமீ சுற்றளவில் மனித உயிர்களே இருக்கக்கூடாது என்றால், அந்த sterile zone-ல் எப்படி பல்லாயிரக்கணக்கான ஏழைத் தொழிலாளர்கள் வசிக்க அனுமதிக்கிறீர்கள்? இது ஓர் ஆபத்தான சர்வதேச விதிமீறல் இல்லையா? நீங்கள் இருவரும் எப்போதாவது அணுஉலை வளாகத்துக்குள்ளேப் போய் இந்த ஏழை இந்தியக் குடிமக்களும், அணுஉலைகளும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று சோதனை நடத்தினீர்களா?போராடும் தொழிலாளர்களை ஏன் உள்ளேயே  அடைத்துவைத்து, மூடி மறைக்கிறீர்கள்? நீங்கள் சொல்வதை அனுஉலை நிர்வாகமும், எல்&டி நிர்வாகமும் கேட்கிறார்களா, அல்லது அவர்கள் சொல்வதை நீங்கள் அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படுகிறீர்களா? போராடும் தொழிலாளர்களை அணுஉலை வளாகத்தைவிட்டு வெளியே அனுப்பி வையுங்கள். அதுதான் அவர்களுக்கும், அணுஉலைகளுக்கும் பாதுகாப்பைத் தரும். போராடும் தொழிலாளர்களின் குரல்களை, கோரிக்கைகளை வெளியுலகம் கேட்கட்டுமே?

இந்த ஏழைத் தொழிலாளர்கள் மீது இன்று (மே 9, 2020) காலை காவல்துறை தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் எதிர்த்தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் வருகின்றன. இப்போது அவர்களைக் குற்றப்படுத்தும் விதமாக கட்டுமானத் தளங்களில் அவர்களில் பலர் பொருட்களை நாசப்படுத்தினார்கள், திருடினார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக அறிகிறோம். சில காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் தொழிலாளர்கள் மீது வழக்குகள் போடப்பட்டிருக்கின்றனவா? எத்தனை வழக்குகள், என்னென்ன வழக்குகள், யார் யார் மீது போடப்படிருக்கின்றன என்கிற விபரங்களைத் தாருங்கள்.

தமிழ், ஆங்கிலம் மொழிகள் அறியாத, ஆதரவற்ற உள்ளூரில் நண்பர்களோ, வழக்கறிஞர்களோ தெரிந்திருக்க வாய்ப்பில்லாத ஏழைத் தொழிலாளர்களுக்கு யார் சட்ட உதவிகள் செய்கிறார்கள். அல்லது அவர்களை கொத்தடிமைகள் போலவே நடத்தி பிரச்சினையைக் கமுக்கமாக  முடித்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறீர்களா?மேற்குறிப்பிட்ட எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் சுதந்திர இந்திய நாட்டின் இறையாண்மை மிக்கக் குடிமக்கள். அவர்கள் யாருக்கும் அடிமைகள் அல்லர். எனவே அவர்களை சந்தித்துப் பேசவும், அவர்களுக்கு வேண்டிய சட்ட உதவிகள் செய்யவும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் விரும்புகிறது" என்று அந்த கடிதத்தை முடித்திருக்கிறார்.

click me!