பல்லாயிரக்கணக்கான கோடிகளை சுருட்டும் அறக்கட்டளைகள்... மத்திய அரசின் மயக்கம் தெளிய வைக்கும் 3டி இயக்கம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 29, 2020, 7:24 PM IST
Highlights

அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு வரக்கூடிய பல்லாயிரம் கோடி ரூபாயை ஏழை- எளிய மக்களிடம் இருந்து வாரிச்சுருட்டும் அறக்கட்டளைகள் வருமான வரியாக செலுத்துவதில்லை. அரசாங்கமும் இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால் 3டி இயக்கத்தை ஆரம்பித்து முதல் குரலை முன் வைத்திருக்கிருக்கிறார் வருமான வரிதுறை ஓய்வு பெற்ற அதிகாரியும், எழுத்தாளருமான பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி.

அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு வரக்கூடிய பல்லாயிரம் கோடி ரூபாயை ஏழை- எளிய மக்களிடம் இருந்து வாரிச்சுருட்டும் அறக்கட்டளைகள் வருமான வரியாக செலுத்துவதில்லை. அரசாங்கமும் இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால் 3டி இயக்கத்தை ஆரம்பித்து முதல் குரலை முன் வைத்திருக்கிருக்கிறார் வருமான வரிதுறை ஓய்வு பெற்ற அதிகாரியும், எழுத்தாளருமான பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி.

இதுகுறித்து அவர், ‘’கோடிக்கணக்கில் சம்பாதித்தும் வருமான வரி செலுத்தாத அறக்கட்டளைகளிடம் வருமான வரி செலுத்த வேண்டும் என்கிற கொள்கை முழக்கத்தோடு 3டி இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம். 3டி இயக்கம் என்பது ’TAX THE TRUSTS’என்பதன் சுருக்கம். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், கல்யாண மண்டபங்களை என தனியார்கள் அறக்கட்டளைகள் மூலமே பெரும்பாலும் நடத்தி வருகின்றனர். 

எல்.கே.ஜி.,யிலிருந்து இன்ஜினியரிங் காலேஜ், ஆர்ட்ஸ் காலேஜ், மெடிக்கல் காலேஜ், மருத்துவமனைகள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், பெரிய பெரிய திருமண மண்டபங்கள் எல்லாமே வெறுமனே தனியார் நடத்துகின்றன. ஆனால், அவர்கள் தனியாக நடத்துவதில்லை. அறக்கட்டளையை ஆரம்பித்து அதன் மூலமே நடத்துகிறார்கள். ஆனால், அவர்கள் அறக்கட்டளை வைத்திருந்தாலும் தர்மத்திற்காக எதையும் செய்வதில்லை. குறிப்பாக இலவசமாக யாருக்கும் எதையும் செய்வதில்லை.

நிறைய கட்டணங்களை வசூலிக்கிறார்கள். சில மருத்துவமனைகளை எல்லாம் பார்க்கும்போது மிகவும் துயரமாக இருக்கிறது. அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். சில மருத்துவமனைகளில் கால் வைத்துவிட்டால் நமது சொத்தையெல்லாம் இழந்து விட்டு தான் வரவேண்டும். பள்ளி கல்லூரிகளில் இன்னும் கொடுமை. திருமண மண்டபங்களில் பல லட்சம் வசூலிக்கிறார்கள். இவற்றையெல்லாம் எளிய மக்களிடம் இருந்து தான் வசூலிக்கிறார்கள். 

இவ்வளவு மோசமாக மக்கள் மத்தியில் இருந்து பணத்தை வாரிக் கொட்டிக் கொண்டிருக்கக் கூடிய தனியார் நிறுவனங்கள் மருத்துவமனை, கல்விக்கூடங்கள் மூலமாக பணத்தை வசூலித்து வந்தாலும் அரசுக்கு அவர்கள் நயா பைசாவைக்கூட வருமான வரியாக செலுத்துவதே இல்லை. காரணம் அவர்கள் அறக்கட்டளை மூலம் நடத்துவதுதான். அறக்கட்டளையில் இருந்து வரும் வருமானத்திற்கு வருமான விதிவிலக்கு இருக்கிறது. ஏன் இந்த அறக்கட்டளைகள் மூல்ம் வரும் வருமானத்திற்கு அரசு வரி வசூலிப்பதில்லை என்பது நமக்குப் புரியவில்லை.

ஆகையால், உடனடியாக இது போன்ற அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் வருமானவரிச் சலுகைகள் திரும்பப்பெற வேண்டும். அவற்றை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். அவர்கள் இலவசமாக எதையும் செய்வதில்லை. ஆகையால் அவர்களும் அரசுக்கு வரி செலுத்தவேண்டும். வருமான வரி என்பதே வரும் வருமானத்தில் இருந்து கட்டுவதுதான். அவர்கள் வருமான வரி செலுத்துவதால் என்ன பாதிப்பு வரப்போகிறது? என்பது புரியவில்லை. 

இதனால், பல்லாயிரம் கோடி ரூபாய்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு வர வேண்டும். ஆனால், அந்தப்பணம் அரசாங்கத்திற்கு வராமலேயே போய்க் கொண்டிருக்கிறது. அப்படி அறக்கட்டளை வைத்து நடத்துபவர்கள் ஏழை- எளிய மக்களுக்கு எந்த ஒரு நல்ல விஷயமும் செய்வதில்லை. இலவசமாகவும் செய்வதில்லை. மேலும், மேலும் சாமானியர்களை சுரண்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதற்காக தரவேண்டும் வருமான வரி விலக்கு? தற்போது கூட கொரோனா வைரஸ் காரணமாக ஏராளமான பொருளாதாரச் சுமை அரசுக்கு வந்திருக்கிறது.

இந்த சமயத்தில் கூட ஏன் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்குத்தர வேண்டும் என்பது புரியவில்லை. ஆகையால், இந்த 3டி இயக்கத்தின் மூலம் அறக்கட்டளைகளுக்கு வரி விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஆகையால், இந்த இயக்கத்தை அத்தனைபேரும் முன்னெடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை நான் தொடர்ந்து முன்வைத்து கொண்டிருக்கிறேன். இந்த இயக்கத்தின் மூலம் மக்கள் அனைவரும் தங்களது கோரிக்கையை அரசாங்கத்திற்கு கோரிக்கையாக வைக்க வேண்டும். அறக்கட்டளைகள் வருமான வரி செலுத்தினால் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் தானே நல்லது.’’ என்கிறார் பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி.

click me!