குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவித்துவிட முடியாது.. நீதிபதிகள் கூறிய கருத்தால் வெல வெலத்து வேலுமணி..!

By vinoth kumarFirst Published Oct 28, 2022, 9:36 AM IST
Highlights

சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டில் எந்த பங்கும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு, கருப்பையா ஆகியோர் ஆஜராகினர். 

இதையும் படிங்க;- எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லாதது ஏன்? ஜெயக்குமார் கொடுத்த வேற லெவல் விளக்கம்..!

அப்போது, வேலுமணி தரப்பில் வாதிடுகையில்;- தொடர்பாக எஸ்.பி. பொன்னி தலைமையில் நடந்த ஆரம்பகட்ட விசாரணையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டதால் வேலுமணிக்கு எதிரான நடவடிக்கையை கைவிடுவது என்று அரசு முடிவெடுத்தது. வழக்குப்பதிவு செய்ய கோரிதான் வழக்கு தொடரப்பட்டது. இந்த டெண்டர் வழங்கியதில் முறைகேடு என்றோ, பணிகளை செயல்படுத்தியதில் முறைகேடு என்றோ புகார் கூறப்படவில்லை. ஒளிவுமறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் வழங்கியதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை. டெண்டர் ஒதுக்கும் குழுவிலும் தான் இடம்பெறவில்லை.

அமைச்சர் என்ற முறையில் தனக்கு எதிராகவும், டெண்டர் பெற்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதே தவிர, எந்த அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. ஆரம்பகட்ட விசாரணையை கருத்தில் கொள்ளாமல், பணிகள் செயல்படுத்தியது தொடர்பான சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து இந்நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளது. வழக்குப்பதிய கோரி தொடர்ந்த வழக்கில், ஆரம்பகட்ட விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்குப் பதிவு செய்வது குறித்தும் இந்த நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர மாநில அரசு அல்ல.

ஆரம்பகட்ட விசாரணைக்கு அரசின் அனுமதி தேவையில்லை. வழக்குப்பதிவு செய்யவும், புலன் விசாரணை மேற்கொள்ளவும் தான் அரசு அனுமதி வேண்டும். முதலில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த மட்டுமே அரசின் அனுமதி பெறப்பட்டது. அதற்கு பிந்தைய விசாரணைக்கும், வழக்குப்பதியவும் அரசின் அனுமதி பெறவில்லை. எனவே இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும். இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை தவிர வேறு எந்த ஆதாரங்களும் இல்லை என்று வாதிடப்பட்டது.

இதையும் படிங்க;-  ஓபிஎஸ் சொன்ன ஒற்றை வார்த்தை.. எடப்பாடிக்கு ரிவிட் அடிக்க ரீ என்டரி கொடுக்கும் மருது அழகுராஜ்..!

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போதுமான கால அவகாசம் இருந்த போதும், அவசரமாக ஏன் வழக்குப் பதிவு செய்யப்பட்டது? எனக் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டாலும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக புதிதாக வழக்குப் பதிவு செய்ய முடியும். குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவித்துவிட முடியாது என்று தெரிவித்தனர். இதையடுத்து, தமிழக அரசு தரப்பு பதில் வாதத்துக்காக இந்த மனுக்கள் மீதான விசாரணையை இன்று நடைபெறுகிறது.

click me!