மன்னிப்பு கேட்கும்வரை அண்ணாமலையை புறக்கணிக்க வேண்டும்! பத்திரிக்கையாளர்கள் சங்கம் கோரிக்கை

By Ajmal Khan  |  First Published Oct 28, 2022, 9:22 AM IST

பத்திரிக்கையாளர்களை குரங்கு என விமர்சித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அதுவரை அவரது நிகழ்ச்சிகளை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 


பத்திரிக்கையாளர்களை விமர்சித்த அண்ணாமலை

பத்திரிக்கையாளர்களை குரங்கு என விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் சங்கம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடலூரில் இன்று (27.10.2022) பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இதற்கிடையில், கோயம்புத்தூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது அண்ணாமலை மீதும் பாஜக மீதும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில், கடலூரில் ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு, செந்தில் பாலாஜி வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற அடிப்படையில், இதற்கு விருப்பப்பட்டால் அவர் பதில் அளிக்கலாம் அல்லது பதில் அளிக்க விருப்பம் இல்லை என்று நாகரீகமாக கூறுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது. ஆனால், அண்ணாமலையோ, கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் மிகவும் தரக்குறைவாக நடந்துகொண்டார். 

Tap to resize

Latest Videos

நாய்,பேய், சாராய வியாபாரிக்கெல்லாம் பதிலளிக்க முடியாது..! செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை

குரங்கை போல சுற்றி வருகிறீர்கள்

பத்திரிகையாளர்களை பார்த்து, “மரத்தின் மேல் குரங்கு தாவுவது போல் சுற்றி, சுற்றி வருகிறீர்கள்” என்று கீழ்த்தரமாக பேசிய அண்ணாமலை “ஊரில் நாய், பேய், சாராயம் விற்கிறவன் எல்லாம் கேட்பான் நான் பதில் சொல்ல முடியாது” என்று கோபமாகவும், மிரட்டும் வகையிலும் பேசிவிட்டு சிறிதும் நாகரீகம் இல்லாமல் பத்திரிகையாளர்களை தள்ளிக்கொண்டு அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.  கடந்த மே மாதம் சென்னை பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களைப் பார்த்து பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று மிக மிக இழிவான வகையில் பேசினார். அண்ணாமலையின் இந்த செயலை பத்திரிகையளார் அமைப்புகள் அனைத்தும் கடுமையாக கண்டித்தன. அவரை கண்டித்து சென்னை உட்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், மீண்டும் பத்திரிகையாளர்களை மிகவும் தரக்குறைவாக அண்ணாமலை பேசியுள்ளார். 

ஊடகத்தினரை இழிவுபடுத்தும் போக்கு அநாகரிகமானது... அண்ணாமலையை விளாசிய டி.கே.எஸ்.இளங்கோவன்!!

அண்ணாமலை நிகழ்வை புறக்கணியுங்கள்

அண்ணாமலையின் இந்த நாகரீகமற்ற, கீழ்த்தரமான நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன், அண்ணாமலை தரக்குறைவாக பேசியது பத்திரிகையாளர்களை மட்டுமல்ல, பத்திரிகை நிறுவனங்களையும் அதன் ஆசிரியர்களையும் சேர்த்துதான் என்பதை உணர்ந்து, அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கும்வரை பத்திரிகை நிறுவனங்கள் அண்ணாமலையை புறக்கணிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. இதே போல சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலை செய்தியாளர்கள் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தி குரங்குகள் என்று தரக்குறைவான விமர்சனம் செய்திருப்பதற்கு  சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. 

கமலாலயக் கூலிகளும் இல்லை

உண்மையான பத்திரிகையாளர்கள் அறிவாலயத்திற்கும் அடிமைகளும் இல்லை அவர்கள் கமலாலயக் கூலிகளும் இல்லை . கட்சி,ஆட்சி என பத்திரிகையாளர்களை அடையாளப்படுத்தி இழிவுப்படுத்தும் போக்கை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளால் அவமதிக்கப்படும் மிரட்டப்படும் போக்கு அதிகரித்து வருவது வேதனைக்கும் கண்டனங்களுக்கும் உரியது.பொது வெளியில் இருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடிக்கவேண்டியதை மீண்டும் வலியிறுத்துவதோடு தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை தமது வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.அதுவே ஆரோக்கிய அரசியலாக அமையும் என்று நம்புகிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

அரசியல் அடிச்சுவடு தெரியாதவர்கள் கட்சியின் தலைவராக ஆக்கினால் இப்படித்தான்! அண்ணாமலையை வச்சு செய்யும் காங்கிரஸ்
 

click me!