சசிகலா புஷ்பாவின் நிலைமையை பார்த்தீங்களா.. வீட்டில் இருந்த பொருள்கள் வெளியேற்றி சீல்.. என்ன காரணம் தெரியுமா?

Published : Oct 28, 2022, 08:46 AM ISTUpdated : Oct 28, 2022, 08:50 AM IST
சசிகலா புஷ்பாவின் நிலைமையை பார்த்தீங்களா.. வீட்டில் இருந்த பொருள்கள் வெளியேற்றி சீல்.. என்ன காரணம் தெரியுமா?

சுருக்கம்

தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக சார்பில் சசிகலா புஷ்பா மேயராக 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இருந்து வந்தார். இதனையடுத்து, ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போன சசிகலா புஷ்பாவின் டெல்லி வீட்டிலிருந்த பொருட்களை அதிகாரிகள் வெளியே வைத்துவிட்டு சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக சார்பில் சசிகலா புஷ்பா மேயராக 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இருந்து வந்தார். இதனையடுத்து, ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர், மாநிலங்களையில் ஜெயலலிதா என்னை அடித்துவிட்டார் என்று சசிகலா புஷ்பா கூறிய சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர் கட்சியில் இருந்த அதிரடியாக நீக்கப்பட்டார். அடுத்த சில நாட்களிலேயே பாஜகவில் இணைந்து மாநிலத்துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார். எனினும் அவ்வப்போது சசிகலா புஷ்பா தொடர்பான சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. 

இதையும் படிங்க;- சர்ச்சையில் சசிகலா புஷ்பா..படுக்கையறையில் மர்மநபர்..ஆபாச மிரட்டல்..விவாகரத்து கேட்ட இரண்டாவது கணவர்..

இந்நிலையில், மாநிலங்களவையில் எம்.பி.யாக இருந்த போது டெல்லியில் மத்திய அரசு சார்பில் அவருக்கு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், சசிகலா புஷ்பாவின் பதவிக்காலம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார். வீட்டை காலி செய்யும்படி அரசு தரப்பிலிருந்து பலமுறை நோட்டீஸும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், அவரது வீட்டில் உள்ள பொருட்களை அதிகாரிகள் வெளியே வைத்து விட்டு அவரது குடியிருப்பிற்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதையும் படிங்க;- சர்ச்சையில் மீண்டும் சசிகலா புஷ்பா.. அரைகுறை ஆடையுடன் படுக்கையறையில்..? பரபரப்பு புகார் அளித்த இரண்டாவது கணவர்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!