அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் அரசு பேருந்துகள்…. தற்காலிக ஓட்டுநர்களை வைத்து விஷப்பரீட்சை நடத்துகிறதா அரசு ?

Asianet News Tamil  
Published : Jan 06, 2018, 08:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் அரசு பேருந்துகள்…. தற்காலிக ஓட்டுநர்களை வைத்து விஷப்பரீட்சை நடத்துகிறதா அரசு ?

சுருக்கம்

temprory drivers met accident in several places

சென்னை மற்றும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிய பேருந்துகள் அடுத்தடுத்து விபத்துகளை சந்தித்ததால் பயணிகளும் பொது மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள்  பணிபுரிந்து வருகிறார்கள்.  இவர்கள் தங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், ஓய்வூதிய நிலுவை தொகைகளை தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத  தமிழக அரசு, தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை தினக்கூலி அடிப்படையில் நியமித்து பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்நிலையில்  தற்காலிக ஓட்டுநர் மூலம் பண்ருட்டியிலிருந்து கடலூர் சென்ற அரசுப் பேருந்து கீழ்அருங்குணம் என்ற இடத்தில் வயலில் இறங்கியது  விபத்திற்குள்ளானது இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் அதில் பயணம் செய்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதே போன்று  தற்காலிக ஓட்டுநர் ஒருவர் இயக்கிய மாநகர பேருந்து  சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆவடி நோக்கி சென்ற போது ஆவடி பேருந்து நிலைய வளாக சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. 

தமிழக அரசும், போக்குவரத்துத்துறை ஊழியர்களும் தங்களது நிலையில் இருந்து இறங்கி வராமல் பிடிவாதமாக இருப்பதால் பொது மக்களும், பயணிகளுத் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நாளை நான்காவது நாளாக இந்த போராட்டம் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மு.க.ஸ்டாலினிடம் உருதுபேசச் சொல்லி கேட்பீர்களா..? காஷ்மீர் Ex முதல்வர் மெஹபூபா முப்தி ஆத்திரம்..!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!