#BREAKING அதிர்ச்சி தகவல்... தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடல்...!

Published : Apr 24, 2021, 05:56 PM IST
#BREAKING அதிர்ச்சி தகவல்... தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடல்...!

சுருக்கம்

தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த மினி கிளினிக்குகளில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது.   

தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த மினி கிளினிக்குகளில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2000 அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளதால் மினி கிளினிக்குகளில் பணிபுரிந்து வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் இனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா பணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மினி கிளினிக்குகள் உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தது போல துணை சுகாதார நிலைங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகள் முடியும் வரை மினி கிளினிக்குகள் செயல்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!