இப்போதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள்- சிறுபான்மையினருக்கு ஆதரவாகபேச முடியவில்லை... கனிமொழி கவலை..!

By Thiraviaraj RMFirst Published Apr 24, 2021, 5:22 PM IST
Highlights

தற்போது உள்ள அரசிய தடத்தில் ஜாதி குறித்தே பேச முடியவில்லை. ஜாதி, மதம், அறிவியல் சார்ந்த கருத்துகளை எதிர்த்து பேச முடிவதில்லை என்றும் ஒரு கருத்திற்கு எதிர்கருத்து வைக்க முடியத சூழலில் மத்திய அரசு செயல்படுகிறது.
 

சென்னை தரமணி ஐஐடி வளாகத்தில் கனவு தமிழ்நாடு என்ற அமைப்பின் சார்பில் பொருளாதார வளர்ச்சியில் “தமிழகத்தின் ஒரு டிரில்லியன் டாலர் கனவு”என்ற தலைப்பில் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.பி கனிமொழி ‘ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு உள்ள அதிகாரங்களை பறிக்கும் சூழல்தான் தற்போது உள்ளது. ஜாதி எதிர்த்து பேசும் சூழலே குறைந்து வருகிறது; தற்போது உள்ள அரசிய தடத்தில் ஜாதி குறித்தே பேச முடியவில்லை. ஜாதி, மதம், அறிவியல் சார்ந்த கருத்துகளை எதிர்த்து பேச முடிவதில்லை என்றும் ஒரு கருத்திற்கு எதிர்கருத்து வைக்க முடியத சூழலில் மத்திய அரசு செயல்படுகிறது.

சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட பணம் தமிழ், மலையாளம், கன்னடம், ஆந்திரா, ஒரியா ஆகிய மொழிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தை விட 22% அதிகம். அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் ஒரு சட்டம் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு. ஆனால், இதுவரை நிறைவேற்ற முடியாத சட்டமும் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடுதான். பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை ஏன் நிறைவேற்றவில்லை.

63% பெண்கள் விவசாய தொழிலாளர்களாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கான அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. அனைத்து துறைகளிலும் பெணகளுக்கு இதுவரை எவ்வித அங்கீகாரமும் கிடைக்கவில்லை. மனிதர்கள் மரியாதையுடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இயற்கையை மனிதர்கள் அழித்த காரணத்தால் இயற்கை தற்போது மனிதர்களை அழிக்கும் சூழல் உள்ளது. அதனால்தான் கொரோனா போன்ற பெருந்தொற்று உலகையே ஆட்டி படைத்து வருகிறது.

மாணவர்கள் அரசியல் பேச கூடாது என்ற நிலையை உருவாக்கியத் தவறு. மாணவர்கள் அரசியல் பேச கூடாது என கூறும் நிலையை மாற்ற வேண்டும். சென்னை ஐஐடியில் பெரியார், அம்பேத்கர் படிப்பகத்திற்கு தடை விதித்த காரணத்தால்தான் இன்று நாடு முழுவது பெரியார் அம்பேத்கர் படிப்பகம் உள்ளது’’ எனக் கூறினார்.

click me!