மாநில அரசுகள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல..!! மத்திய அரசை ஓங்கி அடித்த முதல்வர்..!!

By Ezhilarasan BabuFirst Published May 20, 2020, 5:21 PM IST
Highlights

ஆனால் நிதி உதவி கேட்கும் மாநில அரசுகளை பிச்சைக்காரர்களை போல மத்திய அரசு நடத்துகிறது.
 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அறிவித்த ரூபாய் 20 லட்சத்து 97 ஆயிரம் கோடி நிதி தொகுப்பில் மாநிலங்களுக்கு என எந்த நிதியையும் ஒதுக்காத மத்திய அரசு ,  மாநில அரசுகள் சுயமாக கடன் வாங்குவதற்கும் நிபந்தனைகளை விதித்துள்ளது .  இதற்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு  எழுந்துள்ளது .  இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ,  பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு பொருளாதாரம் திட்டம் உண்மையில் ஒரு மோசடி திட்டம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் .  இது குறித்து  மேலும் தெரிவித்துள்ள அவர் ,  மத்திய அரசு அறிவித்த தற்சார்பு பொருளாதாரம் திட்டம் உண்மையான மோசடி திட்டம் வெறும் எண்களை மட்டும் கூறி மாநில அரசுகளுக்கும் மக்களுக்கும் மோடி அரசு துரோகம் விளைவிக்கிறது , இதை பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் என அழைக்க முடியாது .  சர்வதேச பத்திரிக்கைகள் எல்லாம் மத்திய நிதியமைச்சரின் இந்த அறிவிப்பை பார்த்து கிண்டல் செய்கிறார்கள் .

நிதியமைச்சர் உண்மையாகவே ஜிடிபி உயர்த்த திட்டமிடுகிறாரா அல்லது ரூபாய் 20 லட்சம் கோடி எண்களை அடைவதற்காக அறிவிப்புகளை வெளியிடுகிறாரா என்று கேட்கிறார்கள் .  மாநில அரசுகள் கடன் பெறுவதற்கு வேடிக்கையான கட்டுப்பாடுகளை கூறி மத்திய அரசு தன்னுடைய மரியாதையை தானே குறைத்துக் கொள்கிறது தற்போதைய இக்கட்டான நேரத்தில் பொருளாதார நிதி தொகுப்பு மாநிலங்களுக்கு மிகவும் அவசியமானது .  ஆனால் மத்திய அரசின் மனப்போக்கு நிலப்பிரபுத்துவ கொள்கை போலவும் எதேச்சதிகார மனப்போக்கை கொண்டதாகவும் உள்ளது. இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் .  நாங்கள் இதுபோன்ற திட்டங்களை கேட்கவில்லை கொரோனா வைரஸ் பாதிப்பால் மாநில அரசுகளின் நிதி நிலைமை மோசமாக இருக்கும்போது மக்களுக்கு தேவையான உதவிகளையும் திட்டங்களையும் செய்யவே நாங்கள் மத்திய அரசிடமிருந்து நிதி கோருகிறோம் . ஆனால் நிதி உதவி கேட்கும் மாநில அரசுகளை பிச்சைக்காரர்களை போல மத்திய அரசு நடத்துகிறது. 

மாநிலங்கள் தங்கள் நிதி  பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மையில் இரண்டு சதவிகிதம் கூடுதலாக கடன் பெற அனுமதித்துவிட்டு , கடனை வாங்குவதற்கு நிபந்தனைகளை விதிக்கிறது .அந்த நிபந்தனைகள் நகைச்சுவையாக உள்ளது . கடன்களைத் திருப்பிச் செலுத்தபோவது மாநில அரசுகள் தானே தவிர மத்திய அரசு அல்ல ,  கூட்டாட்சி முறையில் இது போன்ற கொள்கைகளை பின்பற்ற முடியாது அனைத்திற்கும் மத்திய அரசு என்றால் மாநில அரசுகள் எதற்கு .அரசியலமைப்புச் சட்டப்படி தான் மாநில அரசுகள் இயங்குகின்றன மத்திய  அரசின்கீழ் அல்ல ,  கூட்டாட்சி தத்துவத்தை தகர்க்கும் விதமாக மத்திய அரசு செயல்படுவது மாநில அரசுகளை கட்டுப்படுத்த நினைப்பது வேதனையாக இருக்கிறது . பிரதமர் மோடி கூட்டாட்சி குறித்து பேசுகிறார் ஆனால் எல்லாம்  போலித்தனமாகவும் வெறுமையாகவும் இருக்கிறது என சந்திரசேகரராவ் கூறியுள்ளார் . 

 

click me!