இஸ்லாமிய பள்ளிவாசல்களை தோண்டினால் சிவலிங்கங்கள் கிடைக்கும் - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு !

Published : May 27, 2022, 02:11 PM IST
இஸ்லாமிய பள்ளிவாசல்களை தோண்டினால் சிவலிங்கங்கள் கிடைக்கும் - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு !

சுருக்கம்

Telangana BJP : இஸ்லாமிய பள்ளிவாசல்களை தோண்டினால் சிவலிங்கங்கள் கிடைக்கும் என்று தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சிவலிங்கம் கிடைக்கும்

தெலுங்கானா மாநிலம், கரீம்நகரில் நடைபெற்ற இந்து ஏக்தா யாத்திரையில் பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், ‘தீய சக்திகளிடமிருந்து அரசை விடுவித்து ராம ராஜ்ஜியம் கட்டப்படும்.தெலுங்கானாவின் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பல கோவில்களை இடித்து அங்கே மசூதிகளை கட்டினார்கள். இப்போது பள்ளிவாசல்களை தோண்டி எடுத்தால் சிவலிங்கங்களை கண்டுபிடிக்க முடியும்.

தெலுங்கானாவில் உள்ள அனைத்து மசூதிகளையும் தோண்டி ஆய்வு செய்யுமாறு ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஒவைசிக்கு சவால் விடுகிறேன். எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், நாங்கள் தேவாலயங்களை விட்டு வெளியேறுவோம். அதற்கப்புறம் சிவலிங்கங்கள் கிடைத்தால் அந்த இடத்தைக் கைப்பற்றுவோம். இதற்கு ஒவைசி தயாரா என்று கேள்வி எழுப்பினார். மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து மதரஸாக்களும் ஒழிக்கப்பட்டு சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு பறிக்கப்படும். 

பாஜக தலைவர் - சர்ச்சை பேச்சு 

மேலும், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கப்படும். இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியிலிருந்து உருது நீக்கப்படும். போலி மதச்சார்பற்ற சக்திகளுக்கு எதிராக போராடவும், 15 சதவீத இஸ்லாமிய வாக்குகளுக்காக ஔரங்கசீப்பை வணங்கும் வகுப்புவாத சக்திகளுடன் கைகோர்ப்பவர்களுக்கு பாடம் கற்பிக்க போகிறேன் என்று சவால் விடுத்தார்.

இதையும் படிங்க : "ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!

இதையும் படிங்க : நான் சமாதி ஆகிவிட்டேன்.. எந்த வரங்கள் வேண்டுமானாலும் கேளுங்கள்.! தொடரும் நித்யானந்தா அட்ராசிட்டிஸ் !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!