புறகணிக்கப்பட்ட ஆளுநர் உரை.. பிரச்சனை செய்யாமல் பெருந்தன்மையோடு அமைதியாக இருக்கேன்.. பதிலடி கொடுத்த தமிழிசை..

Published : Mar 13, 2022, 04:47 PM IST
புறகணிக்கப்பட்ட ஆளுநர் உரை.. பிரச்சனை செய்யாமல் பெருந்தன்மையோடு அமைதியாக இருக்கேன்.. பதிலடி கொடுத்த தமிழிசை..

சுருக்கம்

வழக்கத்திற்கு மாறாக, தெலுங்கானா சட்டபேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரை இல்லாமல் தொடங்கிய நிலையில், சில நேரங்களில் ஆளுநர்கள் சரியாக நடந்து கொள்வதுகூட தவறாக முன்னிறுத்தப்படுகிறது என்று அம்மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.  

வழக்கத்திற்கு மாறாக, தெலுங்கானா சட்டபேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரை இல்லாமல் தொடங்கிய நிலையில், சில நேரங்களில் ஆளுநர்கள் சரியாக நடந்து கொள்வதுகூட தவறாக முன்னிறுத்தப்படுகிறது என்று அம்மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.இன்று கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, எந்தவொரு மாநிலத்திலும் அங்கு சட்டபேரவை கூட்டம் தொடங்குவதற்கு அம்மாநில ஆளுநரிடம் அனுமதி வாங்க வேண்டும். மேலும் பட்ஜெட்டுக்கு முன்பு கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தான் தொடங்க வேண்டும். ஆனால் தெலுங்கானா சட்டப்பேரவை இன்று அவ்வாறு கூடவில்லை. ஆளுநர் உரை அங்கு இடம்பெறவில்லை. ஆனால் மக்களுக்கும் அரசுக்கும் இடையில் நிற்க நான் விரும்பவிலை. அதனால் இந்த பிரச்சனையை பெரிது செய்யாமல் பெருந்தன்மையோடு இருந்துவிட்டேன் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ.. அணைக்க முடியாமல் திணறும் வீரர்கள்.. ஆயிரக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம்

மேலும் சில நேரங்களில் ஆளுநர்கள் சரியாக நடந்து கொள்வதுகூட தவறாக முன்னிறுத்தப்படுகிறது என்று கூறிய அவர், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சிறு சிறு விஷியங்கள் கூட பெரிதாக்கப்படுகின்றன என்றார். மேலும் அனைத்து ஆளுநர்களும் மக்களுக்கான நல்ல நல்ல திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்றும் மக்கள் நலனுக்காக உயரிய நோக்கதோடு செயலாற்ற வேண்டும் என்றும் பேசினார். இதனிடையே வரும் மார்ச் 27 -ம் தேதி முதல் புதுச்சேரியில் விமான சேவை தொடங்க உள்ளதாக கூறிய ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி - பெங்களூர், புதுச்சேரி- ஹைதராபாத் நகருக்கு இடையே விமான சேவை செயல்பட உள்ளது என்று தெரிவித்தார். இந்த விமான சேவை மூலம், புதுச்சேரி மட்டுமல்லாமல், சுற்றியுள்ள கடலூர், நாகை, விழுப்புரம் போன்ற தமிழக பகுதிகளுக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

மேலும் படிக்க: கண்டப்படி பேசும் ஆளுநர் தேவையில்லை.. உடனே வேந்தர் பொறுப்பில் இருந்து தூக்குங்க..வெகுண்டு எழுந்த வைகோ..

திருநள்ளாறு கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், வேளாங்கண்ணி, நாகூர் போன்ற இடங்களுக்கு செல்லவும், ஆன்மிக சுற்றுலா வளர்ச்சியடையவும் இந்த விமான சேவை உதவியாக இருக்கும் என்றார். குடியரசு தலைவர் பதவிக்கு உங்களின் பெயர் பரீசிலிக்கப்படுவதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, "அதுகுறித்து எவ்வித கருத்தும் சொல்ல முடியாது. நான் இப்போதைக்கு குடிமகள் அவ்வளவுதான்"என்றார்.இதோடுமட்டுமல்லாமல், கொரோனா பாதிப்பு நன்கு குறைவதற்கு முக்கிய காரணம் கொரோனா தடுப்பூசி திட்டம் தான். எனவே இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், இனி வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக அனைவரும் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!