மதுரையை அடித்து தூக்கிய திண்டுக்கல்...!! தகுந்த ஏற்பாடு செய்த தெற்கு ரயில்வே...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2020, 12:39 PM IST
Highlights

மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய தேஜாஸ் ரயில் திண்டுக்கல் ரயில்நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜாஸ் ரயில் விரைவில் நின்று செல்ல ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில்  இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

  

திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு இன்று வருகை தந்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ரயில் நிலையத்தில் பயணிகள் வந்து செல்வதற்கு  எவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் . பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்திண்டுக்கல் - சேலம் இடையே உள்ள ரயில் நிலையங்கள் ரயில்வே பாதைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ள திண்டுக்கல் வந்ததாகவும்  கூறினார்,  இங்கிருந்து ஆய்வுப் பணிகளை தொடங்க உள்ளதாக தெரிவித்தார் அவர்,  மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய தேஜாஸ் ரயில் திண்டுக்கல் ரயில்நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

 

இந்தக் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்ற அவர்,   மதுரை நாகர்கோவில் இடையே இரண்டாவது அகல ரயில்பாதை பணிகள் வருகின்ற  2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடைந்து விடும். பழனி வழியாக கோவைக்கு கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என அப்போது அவர் கூறினார்.
 

click me!