அடங்காத ஆசிரியர்கள்... வெடிக்கும் போராட்டம்... போலீஸ் குவிப்பால் பரபரப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jan 28, 2019, 10:15 AM IST
Highlights

இன்றைக்கு பணிக்கு திரும்பாவிட்டால் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்தும் பணிக்கு பெரும்பாலானோர் பணிக்கு திரும்பவில்லை. அவர்கள் சென்னை சேப்பாக்கம் எழிலகம் முன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  
 

இன்றைக்கு பணிக்கு திரும்பாவிட்டால் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்தும் பணிக்கு பெரும்பாலானோர் பணிக்கு திரும்பவில்லை. அவர்கள் சென்னை சேப்பாக்கம் எழிலகம் முன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 22ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகிய 420க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று அனைவரும் வேலைக்கு திரும்பாவிட்டால், அவர்களது பணியிடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் இடங்களை தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்களை 10,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் முடிவிற்கு வந்துள்ளது தமிழக அரசு.

இந்நிலையில், பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை. தஞ்சை மாவட்டத்தில் 69 சதவிகித பள்ளிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 சதவிகிதப் ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவில்லை. இதனால் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாததாலும், பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாலும் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆசிரியர்கள் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் முன் ஒன்றுகூடி போராட்டத்தில்ன் ஈடுபட உள்ளதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் தலைமை செயலக ஊழியர்கள், நிதித்துறை ஊழியர்கள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனால் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது. 

click me!