நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு ஸ்கூல் இருக்கணும்… ஆசிரியர்களுக்கு அதிரடி வார்னிங் கொடுத்த அரசு !!

By Selvanayagam PFirst Published Jan 28, 2019, 11:30 PM IST
Highlights

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளை  காலை 9 மணிக்குள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் இன்று 7வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து இன்று அவர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று அரசு கெடு விதித்திருந்தது. ஆனால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இன்ற யாரும் வேலைக்குத் திரும்பவில்லை. ஆனால் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

அவர்கள் இன்றைக்குள்  பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்தது. இந்நிலையில், இன்றோடு அவகாசம் முடிந்த நிலையில், நாளை காலை 9 மணி வரை அவகாசம் நீடித்து செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

நாளை காலை 9 மணிக்குள் அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

click me!