தமிழக அரசின் அறிவிப்பை தலையில் வைத்து கொண்டாடும் ஆசிரியர்கள் சங்கம்.. நன்றியோடு வரவேற்பதாக நெகிழ்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Feb 23, 2021, 5:20 PM IST
Highlights

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றியோடு வரவேற்கின்றது 

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றியோடு வரவேற்கின்றது என அச்சங்கத்தின் மாநில தலைவர் இளமாறன் தெரிவித்துள்ளார். 

மேலும் இது குறித்து தெரிவித்துள்ள அவர், ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்தக் கோரிக்கைகள் ஒன்றிரண்டாவது அறிவிப்பாக வெளியிடாதது ஏமாற்றத்தையளிக்கிறது. மேலும் பள்ளிகள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து அறிவிப்பு வராதது மற்றும் 7 வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத்தொகை நிறுத்திவைக்கப்பட்ட ஈட்டியவிடுப்பு, அகவிலைப்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியத்தேர்வில் தேர்ச்சிப்பெற்று 1:2 சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 1500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் குறித்த அறிவிப்பு வராதது வருத்தமே. 

பெரிதும் எதிர்பார்த்திருந்த புதிய ஓய்வூதியம் ரத்து உள்ளிட்டவை சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே மாண்புமிகு முதல்வர் அறிவிக்கவேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். என அவர் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!