‘அதிமுகவே மீண்டும் ஆட்சியமைக்கணும்’... கிடா வெட்டி ஓட்டுமொத்த ஊருக்கே விருந்து வைத்த அதிமுக எம்.எல்.ஏ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 23, 2021, 04:47 PM IST
‘அதிமுகவே மீண்டும் ஆட்சியமைக்கணும்’... கிடா வெட்டி ஓட்டுமொத்த ஊருக்கே விருந்து வைத்த அதிமுக எம்.எல்.ஏ...!

சுருக்கம்

14 கிடாய்களை வெட்டி சிறப்பு பூஜை செய்த நாகராஜன், அதனை சமைத்து கறி விருந்தும் வைத்துள்ளார். இதில் அதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்புடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் கூட இளம் தலைமுறையினர், இல்லத்தரசிகளை கவரும் படியான கவர்ச்சிகரமான திட்டங்களை அதிமுக அரசு அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அதிமுகவே மீண்டும் ஆட்சியமைக்க வேண்டுமென அக்கட்சி எம்.எல்.ஏ.கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்துள்ளதார். சிவங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. நாகராஜன், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 14 கிடாய் வெட்டி சிறப்பு பூஜை செய்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டும், வர உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடனும் சிறப்பு பூஜை நடத்தியுள்ளார். 

14 கிடாய்களை வெட்டி சிறப்பு பூஜை செய்த நாகராஜன், அதனை சமைத்து கறி விருந்தும் வைத்துள்ளார். இதில் அதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து பேசிய எம்.எல்.ஏ. நாகராஜன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு பயிர்கடன் ரத்து, காவிரி - குண்டாறு திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் என எண்ணற்ற மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டுமென மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்துள்ளேன் எனக்கூறியுள்ளார். இங்கு வேண்டினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாம். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!