#BREAKING அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடியார்..!

By vinoth kumarFirst Published Feb 23, 2021, 4:46 PM IST
Highlights

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25ம் தேதி முதல்  காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25ம் தேதி முதல்  காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். 

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு 2 வருடம் காலதாமதமாக நடைபெறுகிறது என போக்குவரத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு சார்பாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது. தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

குறிப்பாக தொமுச,  சிஐடியு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் இதனை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து அரசு காலம் தாழ்த்தி வருவதாக தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னதாகவே வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக தொழிலாளர் நல ஆணையரிடம் தொழிற்சங்கத்தினர் மனு கொடுத்திருந்தனர். மேலும், கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. 

இந்நிலையில், பிப்ரவரி 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர். நீண்ட நாட்கள் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நீடித்தால் தினசரி அலுவலகம் செல்பவர்களும் வெளியூர் செல்பவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்பதால் போக்குவரத்து ஊழியர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த வேலைநிறுத்தம் நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

click me!