குடிமகன்களுக்கு மேலும் குஷுயான அறிவிப்பு... தூள் கிளப்பும் டாஸ்மாக் நிர்வாகம்..!

Published : May 18, 2020, 10:50 AM ISTUpdated : May 31, 2020, 11:56 AM IST
குடிமகன்களுக்கு மேலும் குஷுயான அறிவிப்பு... தூள் கிளப்பும் டாஸ்மாக் நிர்வாகம்..!

சுருக்கம்

தமிழகத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 16ம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் விற்பனையை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 16ம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் விற்பனையை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள சில பகுதிகளை தவிர பிற இடங்களில் 5300 டாஸ்மாக் கடைகள் கடந்த சனிக்கிழமை முதல் திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் மது வாங்க சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்க டாஸ்மாக் நிறுவனம் ஏற்பாடு செய்தது. அதன்படி கடந்த இரு தினங்களாக 300 கோடி ரூபாய்க்கும் மேல் விறபனை செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மது விற்பனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இருந்த நிலையில் இரவு 7 மணி வரை மதுவிற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் குஷியாகி உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!