புதுச்சேரியிலும் போய் போராட்டம் நடத்துங்கள்.. பாஜகவின் TASMAC எதிர்ப்பு போராட்டத்தால் கொதித்த மா.சுப்பிரமணியன்

By vinoth kumarFirst Published Jun 13, 2021, 12:05 PM IST
Highlights

புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகள் திறப்பை எதிர்த்து பாஜக போராட்டம் செய்யவேண்டும். கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் பொழுது கடுமையான கட்டுப்பாட்டுகள் விதித்தும்  டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் பொழுது கடுமையான கட்டுப்பாட்டுகள் விதித்தும்  டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 27 மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்துள்ளதால், இங்கே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் கடைகள் இங்கே திறக்கப்படவில்லை.

இந்நிலையில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே டாஸ்மாக் திறப்புக்கு எதிராக எல்.முருகன் தலைமையில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகள் திறப்பை எதிர்த்து பாஜக போராட்டம் செய்யவேண்டும். கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் பொழுது கடுமையான கட்டுப்பாட்டுகள் விதித்தும்  டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது தொற்று குறைந்ததன் பின்பே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட இருக்கிறது என தெரிவித்துள்ளார். 

click me!