மக்களே கருப்பு பூஞ்சை நோய் பற்றி கவலை வேண்டாம்... அமைச்சர் மா.சு. சொன்ன மகிழ்ச்சியான செய்தி..!

By vinoth kumarFirst Published Jun 13, 2021, 11:30 AM IST
Highlights

தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 3.26 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில்  ஒரு கோடியே ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 3.26 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

சென்னை எக்ஸ்னோரோ நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்; தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 3.26 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில்  ஒரு கோடியே ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மலைப்பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படுகிறது. அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்பதே அரசின் திட்டம். எனவே கொரோனா தடுப்பூசி மையங்களில் மக்கள் யாரும் முண்டியத்து செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் இதுவரை 1,300 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை நோய் குணப்படுத்தக்கூடியது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கான மருந்து பற்றாக்குறை உள்ளது. மேலும் ரெமிடெசிவர் கள்ளச்சந்தையில் விற்பவர்கள் கடுமையாக சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள். 

கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் பொழுது கடுமையான கட்டுப்பாட்டுகள் விதித்தும்  டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது தொற்று குறைந்ததன் பின்பே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட இருக்கிறது. தமிழகம் மீது பாஜகவிற்கு அக்கறையிருந்தால் மத்திய அரசிடம் இருந்து தடுப்பு மருத்துகளை பெற்றுத்தர வேண்டும். புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகள் திறப்பை எதிர்த்து பாஜக போராட்டம் செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

click me!