திமுக எம்.பி. பெயரில் போலி பாஸ்.. சொகுசு காரில் இளம்பெண்ணுடன் உல்லாசம் இருந்த பல் மருத்துவர்..!

By vinoth kumarFirst Published Jun 13, 2021, 9:59 AM IST
Highlights

சந்தேகத்தின் பேரில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனுக்கு செல்போனில் தொடர்புகொண்டு கார் பதிவு எண்ணை குறிப்பிட்டு உங்களுடைய பாஸ் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார். அது நீங்கள் கொடுத்ததுதானா என்று கேட்டதற்கு நான் அப்படி யாருக்கும் வழங்கவில்லை என கூறியுள்ளார்.

திமுக எம்.பி. பெயரில் காரில் போலியான பாஸ் வைத்துக் கொண்டு பள்ளிகாரணை ரேடியல் சாலையில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை பள்ளிகரணை ரேடியல் சாலையில் கடந்த 10ம் தேதி இரவு 9 மணிக்கு புதரை ஒட்டிய பகுதியில் சொகுசு கார் ஒன்று நின்றுக்கொண்டிருந்தது. அவ்வழியாக வந்த பள்ளிக்கரணை போலீசார் கார் அருகில் சென்று பார்த்த போது இளம்பெண்ணும் இளைஞர் ஒருவர் உல்லாசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் இளம்பெண் அறைகுறை ஆடையுடன் காரில் இருந்து இறங்கி இருசக்கர வாகனத்தில் தப்பியோடினார். அந்த இருசக்கர வாகனத்தில் பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. 

அதேபோல், காரில்  எம்.பி. பாஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக இளைஞரிடம் போலீசார் கேட்ட போது தென்சென்னை எம்.பி. தமிழிசை தங்கபாண்டியன் தனக்கு நெருக்கமானவர் என்றார். அவர்தான் இந்த பாஸை கொடுத்தார் என்று சொன்னதால் பெயர் முகவரியை வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனுக்கு செல்போனில் தொடர்புகொண்டு கார் பதிவு எண்ணை குறிப்பிட்டு உங்களுடைய பாஸ் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார். அது நீங்கள் கொடுத்ததுதானா என்று கேட்டதற்கு நான் அப்படி யாருக்கும் வழங்கவில்லை என கூறியுள்ளார்.

பின்னர், பொய் கூறி போலீசாரை ஏமாற்றிவிட்டு சென்ற இளைஞரின் கார் பதிவு எண்ணை வைத்து, சென்னை மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் உள்ள அவரது வீடு தேடி சென்று விசாரணைக்காக பள்ளிகாரணை காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஷாம் கண்ணன் என்பதும் பிரபல மருத்துவமனையில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

ஊரடங்கு காலத்தில் போலீஸ் கெடுபிடியில் இருந்து தப்பிக்கவும், சுங்கக்கட்டணத்தை செலுத்தாமல் இருக்கவும்  எம்.பி. பாஸை போலியாக தயாரித்ததாக ஒப்புக்கொண்டார். விஜிலென்ஸ், மீடியா என்ற பல போலி பாஸை தயாரித்து வைத்திருந்தார். இதனையடுத்து, கார் மற்றும் போலி பாஸ்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

click me!