சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் இருக்கும் கொரோனா... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல்..!

By vinoth kumarFirst Published Jun 2, 2020, 1:57 PM IST
Highlights

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா முகக்கவசம் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா முகக்கவசம் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதார துறையினர், மாநகராட்சி அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னையில் தொற்று பரவலை தடுக்க கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம். சென்னையில் 15 மண்டல ஐஏஎஸ் அதிகாரிகள் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். மக்கள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளில் தொற்று அதிகமாக உள்ளதாக தெரிவித்தனர். 

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 23,495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 56 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். சரியான முறையில் சிகிச்சை அளித்ததின் விளைவாக குணமடைந்தவர்கள் சதவிகிதம் அதிகமாகியுள்ளது. உயிரிழப்பு 0.8 சதவீதம் தான் உள்ளது. ஆகையால், யாரும் அச்சப்பட வேண்டாம் என்று முதல்வர் கூறியுள்ளார். பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 1,620 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். 

மேலும், பேசிய முதல்வர் விளம்பரத்திற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறைகூறி வருகிறார். பிசிஆர் கிட்ஸ் குறித்த ஸ்டாலின் புகாருக்கு முதல்வர் பதிலளித்துள்ளார். விளம்பரத்திற்காக நாங்கள் பேசவில்லை, அரசு சரியான முறையில் செயல்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் 2741 பேர் வெண்டிலேட்டர்கள் உள்ளன.  வெண்டிலேட்டரில் 5 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். வெண்டிலேட்டர் பயன்படுத்தக்கூடியஅளவிற்கு கொரோனா தீவிரமாகவில்லை.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா முகக்கவசம் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. 1.5 கோடி ஏழை மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொண்டு இருக்கிறோம். மாநிலத்தில் 75,000 படுக்கை வசதி, சென்னையில் 17,500 படுக்கை வசதிகள் உள்ளது என்று முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.

click me!