படமாகிறது முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு... எகிறும் எதிர்பார்ப்பு..!

Published : Jun 02, 2020, 01:07 PM IST
படமாகிறது முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு... எகிறும் எதிர்பார்ப்பு..!

சுருக்கம்

தேசிய தலைவர் என்கிற பெயரில் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக தயாராகி வருகிறது.   

தேசிய தலைவர் என்கிற பெயரில் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக தயாராகி வருகிறது. 

முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தேசிய தலைவர் என்கிற பெயரில் திரைப்படமாக தயாரித்து வருகின்றனர். இதில் தேவராக நடிக்கும் ஜெ.எம்.பஷீர் இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் களமிறங்குகிறார். இதுகுறித்து பஷீர் கூறுகையில், தேவரின் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை தொகுத்து படமாக்குகிறோம். இந்தப்படத்தில் ராஜ்கிரண், கார்த்தி, பொன்வண்ணன் உள்ளிட்ட பிரபல நடிகர்களும் நடிக்க உள்ளனர். நான் தேவராக நடிக்கிறேன். சவுத்ரி உள்ளிட்ட மூன்று பேர் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்’’எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப்படத்தில் ஃபர்ஸ்ட் லிக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப்படம் சர்ச்சையை ஏற்படுத்துமா என்பது வெகுவிரைவில் தெரிய வரும்.   

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?