புதுசு கண்ணா புதுசு... எல்லாம் புதுசாவே தான் வேணுமா? தயாராகும் அமைச்சர்களின் அறைகள்..!

By Selva KathirFirst Published May 26, 2021, 12:22 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் நிதி நெருக்கடியால் பொதுமக்களிடம் கொரோனா நிவாரண நிதி கோரி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் சென்னை தலைமைச் செயலகத்தில் நன்றாக இருக்கும் அமைச்சர்களின் அறைகளை புதுப்பிப்பதாக கூறி கோடிகளை செலவு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் நிதி நெருக்கடியால் பொதுமக்களிடம் கொரோனா நிவாரண நிதி கோரி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் சென்னை தலைமைச் செயலகத்தில் நன்றாக இருக்கும் அமைச்சர்களின் அறைகளை புதுப்பிப்பதாக கூறி கோடிகளை செலவு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

பொதுவாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்றால் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகள் புதுப்பிக்கப்படும். மேலும் அமைச்சர்களுக்கு என்று புதிதாக கார்கள் வாங்கிக் கொடுக்கப்படும். இது கடந்த 2016ம் ஆண்ட வரை தொடர்ந்தது. ஆனால் தற்போது நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. அப்போது எல்லாம் தமிழகம் பெரிய அளவில் கொரோனா போன்ற பேரிடர்களை எதிர்கொள்ளவில்லை. எனவே அமைச்சர்களின் அறைகளை புதுப்பிக்க செலவு செய்வதை யாரும் குறை கூறவில்லை. ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை. கொரோனா சூழலில் தமிழக அரசு மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள உலகத் தமிழர்களே நிதி தாருங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை ஏற்று உலகம் முழுவதிலும் இருந்து தமிகத்திற்கு கொரோனா நிவாரண நிதி குவிந்து வருகிறது. இந்த நிலையில் ஒருபுறம் கொரோனாவை எதிர்கொள்ள தமிழக அரசு செலவை பார்த்து பார்த்து செய்து வரும் நிலையில், ஏற்னவே நன்றாகவே இருக்கும் அமைச்சர்களின் அறைகளை புதுப்பிப்பதற்காக கோடிகளை கொட்டி செலவு செய்வதாக புகார் எழுந்துள்ளது. பொதுவாக அமைச்சர்களின் அறை எப்போதும் புதுப்பித்தது போலவே தான் இருக்கும்.

ஏனென்றால் அவ்வப்போது பெயின்ட் அடிப்பது, மர வேலைகளை பார்ப்பது என அதனை பொதுப்பணித்துறை சிறப்பாகவே வைத்திருக்கும். அப்படி இருந்தும் ஆட்சி மாறிய நிலையில் அமைச்சர்களின் அறைகள் புதுப்பிக்கப்படுகின்றன. இதற்காக அறைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் தற்போது தலைமைச் செயலகத்தில் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் அமரும் நாற்காறிகள், விருந்தினர்கள் அமரும் நாற்காலிகள், கம்ப்யூட்டர்கள், ஸ்கேனர்கள், பிரின்டர்கள் என அறையில் உள்ள அனைத்து பொருட்களும் குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

 

இவற்றை எல்லாம் பார்க்கும் போது அவற்றை ஒட்டு மொத்தமாக மாற்றப்போகிறார்களா என்கிற சந்தேகம் வருகிறது ஏனென்றால் அமைச்சர்களின் நாற்காலிகள் முதல் விருந்தினர்கள் நாற்காழிகள் வரை அனைத்தும் புதிதாக நல்ல நிலையில் தான் உள்ளன. ஆனால் அவற்றை எடுத்து ரூமுக்கு வெளியே குவித்து வைத்துள்ளனர். சில பொருட்கள் வெட்ட வெளியில் போடப்பட்டுள்ளன.

அவை மழையில் நனைந்து பாழாகும் நிலை உள்ளது. எப்படியும் சுமார் 30 அமைச்சர்களின் அறைகளை புதுப்பிக்க கோடி ரூபாய் செலவாகும் என்கிறார்கள். புதிதாக நாற்காளிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் செலவு மேலும் அதிகமாகும். கொரோனா பரவி வரும் சூழலில் நிதிநிலையை உணர்ந்து அமைச்சர்கள் ஏன் பழைய நாற்காளிகளில் அமரக்கூடாது, அமைச்சர்களை பார்க்க வரும் விருந்தினரகள் என்ன ரூம் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும், புதிய நாற்காழியில் தான் அமருவோம் என்றெல்லாம் கன்டிசன் போடவா போகிறார்கள்?

click me!