Tamilnadu rain:தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் கவனமாக இருங்க..

By Ezhilarasan BabuFirst Published Dec 7, 2021, 12:44 PM IST
Highlights

07.12.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

07.12.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக 08.12.2021:  கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும் , 09.12.2021: அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.10.12.2021, 11.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஆயிக்குடி (தென்காசி) 10, பெரியாறு (தேனி) 8, தென்காசி (தென்காசி), விராலிமலை (புதுக்கோட்டை), மோகனூர் (நாமக்கல்), செங்கோட்டை (தென்காசி) தலா 5, சாத்தூர் (விருதுநகர்), பாலக்கோடு (தருமபுரி), மீமிசல் (புதுக்கோட்டை) தலா 4, அன்னவாசல் (புதுக்கோட்டை), வந்தவாசி (திருவண்ணாமலை), பென்னாகரம் (தருமபுரி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), மருங்காபுரி (திருச்சி), ஒகேனக்கல் (தருமபுரி), தேக்கடி (தேனி), ஓசூர் (கிருஷ்ணகிரி), செங்கம் (திருவண்ணாமலை , பூதபாண்டி (கன்னியாகுமரி) தலா 3, மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!