நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் வலுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வி.லோகப்பிரியாவை மனதாரப் பாராட்டுகிறேன்.
நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் வலுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வி.லோகப்பிரியாவை மனதாரப் பாராட்டுகிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கல்லுக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமுத்து. இவரது மகள் லோகப்பிரியா. நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் 52 கிலோ எடைப் பிரிவில் 350 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
undefined
ஆனால், லோகப்பிரியாவின் சந்தோஷம் சிறிது நேரம் கூட நீடிக்காமல் போனது. லோகப்பிரியாவின் தந்தை மாரடைப்பால் இறந்த செய்தியை அறிந்து மகள் கதறி துடித்துள்ளார். இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றியை லோகப்பிரியா பெற்ற நேரத்தில் அவரது தந்தையை இழந்திருப்பது வருத்தமளிக்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் வலுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வி.லோகப்பிரியாவை மனதாரப் பாராட்டுகிறேன்.
இத்தகைய வெற்றியை லோகப்பிரியா பெற்ற நேரத்தில் அவரது தந்தையை இழந்திருப்பது வருத்தமளிக்கிறது. இந்த இழப்பிலிருந்து மீண்டுவருவதற்கான மனவலிமையை அவரும், அவரது குடும்பத்தினரும் பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
இத்தகைய வெற்றியை லோகப்பிரியா பெற்ற நேரத்தில் அவரது தந்தையை இழந்திருப்பது வருத்தமளிக்கிறது. இந்த இழப்பிலிருந்து மீண்டுவருவதற்கான மனவலிமையை அவரும், அவரது குடும்பத்தினரும் பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். (2/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran)இந்த இழப்பினால் மனம் சோர்ந்துவிடாமல் தான் சார்ந்திருக்கும் விளையாட்டில் மேலும் பல சாதனைகளை லோகப்பிரியா படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என டிடிவி.தினகரன் பதிவிட்டுள்ளார்.