இபிஎஸ் உடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா..? ஸ்டாலினுக்கு சவால் விடும் எஸ் பி வேலுமணி

By Ajmal KhanFirst Published Dec 2, 2022, 2:52 PM IST
Highlights

திமுக அரசை வீழ்த்தி, மீண்டும் அதிமுகவை அரியணை ஏற வைப்பது மட்டுமல்லாமல். எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்குவதே தங்களது இலக்கு  எனவும்  எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

அதிமுக உண்ணாவிரத போராட்டம்

கோவையை புறக்கணிக்கும் திமுக அரசை கண்டித்தும், சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு,  கட்டுமான பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக சார்பாக கோவையில் உண்ணா போராட்டம் நடைபெற்றது.  முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்று  தொடங்கிவைத்தார்.

அப்போது கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகால வளர்ச்சி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தமிழக மக்களுக்கு தேவையானதை பார்த்து பார்த்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்ததாக தெரிவித்தார்.  சாலைகள் பாலங்கள் என அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகும் கூறினார். 

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி..? ஆளுநரிடம் அண்ணாமலை புகார்..! தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட ஆர்.என்.ரவி

எஸ்.பி.வேலுமணி சவால்

கோவையில் அதிமுக கூட்டம் நடத்தினால் திமுக ஆட்சிக்கு முடிவு காலம் என்பதை நிதர்சனமான உண்மை எனவும் தெரிவித்தார். நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாத முதலமைச்சர் ஸ்டாலின் தான் அதிமுக பத்து கேள்வி கேட்பதாகவும் விமர்சித்தார்.கோவையில் அதிமுக அரசு கொண்டு வந்த அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் திமுக அரசு முடக்கியுள்ளதாக குற்றச்சாட்டிய அவர், எடப்பாடி பழனிசாமியோடு முதலமைச்சர் ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா ? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

திமுக அரசை வீழ்த்தி, மீண்டும் அதிமுக அரசு அரியணை ஏற வைப்பது மட்டுமல்லாமல். எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்குவோம் என்றும்  எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். திமுக ஆட்சி மக்களை ஏமாற்றி விட்டதாக தெரிவித்தவர் , வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஒரு ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு 18 மாத கால திமுக ஆட்சியே சாட்சி..! ஸ்டாலினை கடுமையாக விளாசிய எடப்பாடி

click me!