எளிய மக்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு - இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்

First Published May 26, 2018, 11:16 AM IST
Highlights
tamilnadu journalist writter artist protest for sterlite death issue


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒட்டி  மக்கள் ஊர்வலத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை துப்பாக்கி சூட்டில் பலர் படுகாயம் அடைந்தனர். 13 பேர் பலியாகியுள்ளார். இந்நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

துப்பாக்கி சூட்டை கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாய் போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முழுவதும் திமுக மற்றும் அனைத்துகட்சிகளும் மாநிலம் முழுவதும் மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டைக் கண்டித்து கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் திரை உலகத்தினர் என்பபலரும் கலந்து கொண்டு கண்டன போராட்டதை நடத்தி வருகின்ற்னர். இதில் இயக்குநர் பா.ரஞ்சித், சசிகுமார், பாலாஜி சக்திவேல், ராஜீவ் முருகன் மற்றும் பல ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

பத்திரிகையாளர்களை சந்தித்த ரஞ்சித் கொல்லப்பட்ட மக்கள் அனைவரும் எளிமையானவர்கள் என்றும் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கண்டனத்துக்குரியது என்றார். 

click me!