கொரோனா வைரஸால் பயம் இல்லை...!! தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இல்லை சுகாராத்துறை அதிரடி...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 25, 2020, 6:01 PM IST
Highlights

சுற்றுலாப்பயணிகள் சீனாவுக்கு செல்ல வேண்டாம் எனவும் அந்தந்த  நாடுகள் தங்கள் நாட்டுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது .

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த பாதிப்பு இந்தியாவிலேயே இல்லை என கூறியுள்ளார் .  சீனாவில் கொரோனா  வைரஸ்  பாதிப்பு  அந்நாட்டு மக்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது .  வூகான்  நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இந்த வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது . காய்ச்சல் பாதிப்பால்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  இருவர் இந்த நோய் முற்றியதால்  உயிரிழந்தனர் .  அந்நாட்டில்  பலருக்கும்  இந்த காய்ச்சல் வேகமாக பரவியது .  அந்நாட்டின் தலைநகர் பீஜிங் மற்றும் ஷங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவிய கொரோனாவால் முதலில்  3 பேர் உயிரிழந்த நிலையில்  பலி எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது . 

இதுவரை 1. 300 பேருக்கு இந்த நோயின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது .  இந்நிலையில் இந்த காய்ச்சலுக்கு 41 பேர் உயிரிழந்துள்ளனர் என சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .  இதனையடுத்து தென் கொரியா தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் இந்த காய்ச்சல் பரவியுள்ளது   தாய்லாந்து நாட்டில் முதல் மூன்று பேர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர் .  அதேபோல் சீனாவில் இருந்து அமெரிக்கா வந்த ஒருவருக்கு இந்த காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது .  பிரான்சுக்கும்  இந்த காய்ச்சல் பரவியுள்ளது .  இதனால் சர்வதேச விமான நிலையங்களில் சீனாவிற்கு சென்று வருபவர்கள் மற்றும் சீனர்களை தடுத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது .  சுற்றுலாப்பயணிகள் சீனாவுக்கு செல்ல வேண்டாம் எனவும் அந்தந்த  நாடுகள் தங்கள் நாட்டுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது . 

ஆஸ்திரேலியாவிலும் இந்த வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  இந்தக் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள  வூகான் நகரத்தில் பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது .  வூகான்  நகரவாசிகள் காய்ச்சல் பரவாமல் இருக்க முகமூடிகளை அணிந்து கொள்ள சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இன்று ஒரே நாளில் 15 பேர் மரணமடைந்துள்ளனர் இது சீனாவை நிலைகுலைய வைத்துள்ளது.   இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சீனாவில் இருந்து சென்னை வரும் பயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படுகிறது ,  கொரோனா வைரஸ் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இல்லை என அவர் தெரிவித்துள்ளார் .
 

click me!